பட்டபகலில் மேம்பாலத்தின் மீதிருந்து பணத்தை வாரி இரைத்த நபர்… பரபரப்பு வீடியோ …

பட்டபகலில் மேம்பாலத்தின் மீதிருந்து பணத்தை வாரி இரைத்த நபர்… பரபரப்பு வீடியோ …

பெங்களூர்;

பெங்களூர் கே.ஆர் புரம் மேம்பாலத்தில் இருந்து அடையாளம் தெரியாத நபர் ஒருவர் பணத்தை (ரூ. 10 நோட்டுகள்) அள்ளி அள்ளி வீசினார் . மேம்பாலத்தில் இருந்து கீழே விழும் பணத்தைப் பிடிக்க மக்கள் திரண்டனர்.

பரபரப்பான மார்க்கெட் பகுதியான அதில், அவ்வழியில் சென்ற இருந்த மக்கள் மீதும் பணத்தை வீசி மேம்பாலத்தில் போக்குவரத்தை நிறுத்தினார் அந்த நபர். நகரின் டவுன்ஹாலுக்கு அருகில் உள்ள கே.ஆர் மார்க்கெட்டில், மேம்பாலத்திற்கு கீழே கணிசமான கூட்டம் கூடியிருந்தது.

சம்பந்தப்பட்ட நபர் வினோதமாக, கழுத்தில் சுவர்க் கடிகாரத்தையும் கழுத்தில் அணிந்திருந்தார். மேம்பாலத்தில் இருந்து பணத்தை அவர் தூக்கி எறியத் தொடங்கியவுடன் மக்கள் அவரைச் சுற்றி வளைத்தனர். ரூபாய் 10 மதிப்புடைய கரன்சி நோட்டுகள் இருந்தன. 3,000 மதிப்புள்ள நோட்டுகளை அவர் வீசியதாக, சம்பவத்தின் போது அப்பகுதியில் இருந்தவர்கள் தெரிவித்தனர்.

அந்த நபர் யார், எதற்காக பணத்தை அள்ளி வீசினார் என்பதும் தெரியவில்லை. போலீஸ் குழு அங்கு வருவதற்குள் அந்த நபர் அங்கிருந்து தப்பிச் சென்றதாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து உள்ளூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து அந்த நபரை தேடி வருகின்றனர்.

Leave a Reply