தமிழக அமைச்சரை ஒருமையில் பேசிய 2 இளைஞர்கள் கைது ..

தமிழக அமைச்சரை  ஒருமையில் பேசிய 2 இளைஞர்கள் கைது ..

சென்னை;

ராணிப்பேட்டை சட்டமன்ற உறுப்பினரும் தமிழ்நாடு கைத்தறித்துறை அமைச்சருமானவர் காந்தி.   இவர் கடந்த 21 ஆம் தேதி அன்று சென்னையில் இருந்து ராணிப்பேட்டைக்கு சென்று கொண்டிருந்திருக்கிறார்.  

அப்போது காவேரிப்பாக்கம் அருகே சென்ற போது அவரது செல்போனுக்கு ஒரு அழைப்பு வந்திருக்கிறது . 

அந்த அழைப்பை எடுத்து பேசியபோது,  சென்னையைச் சேர்ந்த இரண்டு இளைஞர்கள் பேசி இருக்கிறார்கள்.  அவர்கள்,  ராணிப்பேட்டை பகுதியைச்  சேர்ந்த சாமுவேல் என்பவர் தங்களின் வங்கியில் இருந்து கடன் கேட்டதாகவும் அந்த கடனை நீங்கள் தான் பெற்று தர வேண்டும் என்றும் கூறியிருக்கிறார்கள். 

 அதோடு அமைச்சர் காந்தியை இருவரும் ஒருமையில் கண்டபடி பேசி இருக்கிறார்கள்.  இதனால் அமைச்சரின் உதவியாளர் ராஜசேகர் கடந்த 21 ஆம் தேதி அன்று காவிரிப்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

 அமைச்சரின் உதவியாளர் அளித்த புகாரியின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வந்ததில்,  அமைச்சர் இடம் செல்போனில் பேசிய அந்த இளைஞர்கள் சென்னை திருவொற்றியூரை சேர்ந்த கோகுல் , கொண்டித்தோப்பு பகுதியைச் சேர்ந்த பாலாஜி என்பது தெரிய வந்திருக்கிறது .

இதை அடுத்து அந்த இரண்டு பேரையும் கைது செய்து விசாரணை நடத்தி நீதிமன்றத்தில் ஆச்சரியப்படுத்தி,  பின்னர் வேலூர் மத்திய சிறையில் அடைத்துள்ளனர் போலீசார்.
 

Leave a Reply