தோள்பட்டை வலி நீங்க பலப்படுத்தும் ”சலபாசனம்”!!

தோள்பட்டை வலி நீங்க பலப்படுத்தும் ”சலபாசனம்”!!

எளிமையான யோகாசனங்களை தினமும் காலையில் நீங்கள் 10 நிமிடம் பயிற்சி செய்தாலே, கணையம் ஒழுங்காக இயங்கும். நமது பண்புகள் மாறும். நீரிழிவு இருந்தால் சரியாகும். அர்த்த சலபாசனம் செய்து வாருங்கள். நீரிழிவு பிரச்சனை நிச்சயம் குணமாகும்!

செய்முறை :

விரிப்பில் புஜங்காசனத்துக்குப் படுத்ததுபோல, படுக்கவும். கைகளை உடலுக்கு அருகில் வைக்கவும். இந்த நிலையில் இருந்து, மூச்சை உள்ளே இழுத்தபடியே முதலில் இடது காலை மேல்புறமாகத் தூக்கவும். ஓரிரு விநாடிகளுக்குப் பிறகு மூச்சை வெளியேவிட்டபடி பழைய நிலைக்கு வரவேண்டும். இதேபோல், வலது காலைத் தூக்கி இறக்கவும். இது ஒரு சுற்று. இதுபோல ஆறு முறை செய்ய வேண்டும். இடையில் மூச்சுவாங்கினால், கொஞ்சம் ஓய்வெடுக்கலாம்.

பலன்கள்:

கணையம் நன்றாக இயங்கும். நீரிழிவிற்கு நிச்சயமாக முற்றுப்புள்ளி வைத்து விடலாம்! தொடர்ந்து ஒரு மண்டலம் (48 நாட்கள்) பயிற்சி செய்தால், நிச்சயம் பலன் உண்டு.

மூட்டு சவ்வுகள் நன்றாக செயல்படும். மூட்டுவலி வராது. வலி இருந்தாலும், தொடர்ந்து பயிற்சி செய்யும்போது விரைவிலேயே சரியாகும்.

கால் நரம்புகள் பலம் பெறும். பாதங்களில் வலியோ, வீக்கமோ வராது.

அதிகப்படியான வயிற்று சதை குறையும். உடல் அழகாக இருக்கும். அதிக உடல் எடையையும் பக்கவிளைவின்றி சரிபடுத்தும்.

இரு கைகளுக்கும், தோள் பட்டைக்கும் பிராண ஆற்றல் நன்றாகக் கிடைக்கும். இதனால் கைவலி, தோள்பட்டை வலி நீங்கும். கைகள் நன்றாக பலம் பெறும்.

குப்புறப் படுத்தபடி இந்த ஆசனம் செய்வதால், இதயமும், நுரையீரலும் நன்றாக அமுக்கப்படும். இதனால் நுரையீரலிலுள்ள அசுத்தக் காற்றானது வெளியேறும். நல்ல பிராண சக்தியும் உள்வாங்கப்பட்டு உடலுக்கு வலு கிடைக்கும். தவிர, இதயம் சம்பந்தமான எந்த பிரச்சனையும் எப்போதும் வராது.

பெண்களுக்கு அடிவயிற்றில் உஷ்ணம் அதிகமாக இருக்கும். இதனால் வெள்ளைப்படுதல் அதிகமாகும். உடலும் களைப்பாக இருக்கும். உடலுறவில் நாட்டமிருக்காது. இந்த ஆசனமானது அடி வயிற்றுச் சூட்டை சமன்படுத்துகிறது. அதனால் வெள்ளைப்படுதலும், மாதவிடாய் பிரச்சனையும் சரியாகும்.

Leave a Reply