திமுகவில் மிக முக்கிய பொறுப்பு வேண்டுமா ? கல் எடுத்து வீசி அடித்தால் போதும் … அண்ணாமலை விமர்சனம்…

திமுகவில் மிக முக்கிய பொறுப்பு வேண்டுமா ? கல் எடுத்து  வீசி அடித்தால் போதும் … அண்ணாமலை விமர்சனம்…

நெல்லை;

நெல்லை மாவட்டத்தில் உள்ள மாற்று கட்சிகளைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்டோர் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை முன்பு கட்சியில் இணையும் விழா பாஜக சட்டமன்ற குழு தலைவர் நயினார் நாகேந்திரன் இல்லத்தில் நடைபெற்றது.

இதில் கலந்து கொண்ட பின்னர் செய்தியாளர்களை சந்தித்த பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, 

பாஜக வைத்திருக்கும் கேள்விகளுக்கு மாநில அரசு இதுவரை பதில் கூட சொல்லவில்லை. இதுதான் திமுகவின் நிலைமை.. பெயருக்காக எதையாவது திசை திருப்புவற்காக ஒரு திட்டத்தை கொண்டு வருவது. அது சாத்தியம் இல்லை என பாஜக தலைவர்கள் சொல்லும் போது அதை கிடப்பில் போட்டு விட்டு அடுத்த விசயத்தை நோக்கி செல்ல வேண்டியது.

மேலும் பேசுகையில் .திமுகவின் மிக முக்கிய பொறுப்புக்கு வர வேண்டும் என்றால் கல் எடுத்து அடிக்க வேண்டும் போல தெரிகிறது. பால்வளத்துறை அமைச்சர் நாசர் புலி வேகத்தில் பாய்ந்து கல் எடுத்து அடிக்கப்போனது தான் திமுக அரசு 20 மாதங்களாக செய்வதை காட்டுகிறது. 

பட்டப்பகலில் ஒரு அமைச்சர் அடிக்க போவது புதிது கிடையாது. நிறைய குளறுபடிகள் செய்துள்ளனர். நிறைய தப்பான விசயங்களை தவறுதலாக சொல்லி இருக்கிறார். இன்று திமுக அமைச்சர்கள் எப்படி இருக்கிறார்கள் என மக்கள் மன்றத்தில் வெட்ட வெளிச்சமாக தெரிகிறது என  விமர்சித்தார்.

தொடர்ந்து பேசிய அவர், இடைத்தேர்தலை பொறுத்தவரை 80 சதவிகிதம் ஆளும் கட்சியினர் வெற்றி பெற்று உள்ளனர். காரணம் ஆளும் கட்சியின் பண  பலம், படை பலம், அதிகாரிகளை தவறுதலாக பயன்படுத்துவது என உள்ளது என்றார் . 

குடியரசு தினவிழாவை முன்னிட்டு தமிழ்நாடு ஆளுநர் அழைத்த தேநீர் விருந்தை புறக்கணிப்பதாக விடுதலை சிறுத்தை கட்சி தெரிவித்துள்ளது  குறித்து கேட்டதற்கு, கடந்த முறை சொன்னதையே இப்போதும் கூறுகிறேன். டீ செலவு மிச்சம்” என விமர்சித்தார்

Leave a Reply