வீட்டில் நாட்டு வெடிகுண்டை தயார் செய்த ரவுடி.. பிடிக்க சென்ற போது தடுக்கி விழுந்ததால்”மாவு கட்டு போட்டு’ சிறையில் அடைத்த போலீஸ்…

வீட்டில் நாட்டு வெடிகுண்டை தயார் செய்த ரவுடி.. பிடிக்க சென்ற போது  தடுக்கி விழுந்ததால்”மாவு கட்டு போட்டு’ சிறையில் அடைத்த போலீஸ்…

காஞ்சிபுரம் ;

காஞ்சிபுரம் மாநகராட்சிக்குட்பட்ட‌ மாண்டூகணீஸ்வரர் கோவில் தெரு பகுதியில் ,ஒரு வீட்டில் சிலர் வாடிக்கை எடுத்து தங்கியிருந்து கஞ்சா விற்பனை செய்வதாக அந்த தனிப்படை போலீசாருக்கு தகவல் கிடைத்த நிலையில், அவ்வப்போது அவ்வீட்டிற்கு சென்று வந்த காஞ்சிபுரம் மாநகராட்சியில் ஒப்பந்த ஊழியராக பணிபுரிந்துவந்த சிவசங்கரன்‌ என்பவனை பிடித்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

அந்த விசாரணையில் அவ்வீட்டில் சிலர் தங்கியிருப்பது தெரியவந்த  நிலையில் , தீடிரென போலீசார் அவ்வீட்டில் சோதனை நடத்தியபோது அங்கு நாட்டு வெடிகுண்டுகள் தயாரிக்கப்பட்டு வைத்திருந்ததும், தயாரிக்க பயன்படுத்தி ஆணி, பால்ஸ் போன்ற மூல பொருட்களும் கத்தி உள்ளிட்ட பொருட்களும் இருப்பது தெரியவந்தது.

இதனையெடுத்து அவற்றை பறிமுதல் செய்த போலீசார் குற்றவாளிகளை தீவிரமாக தேடிவந்தனர். இதனையெடுத்து இதில் தொடர்புடைய சென்னை வியாசர்பாடியை சேர்ந்த புகழேந்தி,அவனது நண்பர்களான திருத்தணியை சேர்ந்த ஜெயகுமார், சோமேஸ், லோகேஸ் ஆகியோரும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

மேலும் அந்த வழக்கின் முக்கிய குற்றவாளியான விக்கி (எ) பரிவட்டம் விக்கி தலைமறைவாக இருந்துவந்த நிலையில் போலீசார் தொடர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வந்தனர். 

இந்த நிலையில் தாயார்குளம் அருகே  கஞ்சா விற்பனையாளர்கள் மணிகண்டன், வசந்த்குமார் ஆகியோருடன் பதுங்கி இருந்தான் . இந்நிலையில் போலீசார் இருவரையும் பிடித்துவிட பரிவட்டம் விக்கி என்கிற தப்பியோடியபோது கால் தடுக்கி கீழே  விழுந்து நிலையில் போலீசாரிடம் பிடிபட்டார்.

இதனையெடுத்து காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளித்து மாவு கட்டு போடப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.

Leave a Reply