2 சீட் மற்றும் சில கோடிகளுக்காக திமுகவிடம் கட்சியை அடமானம் வைச்சவங்கதான் கம்யூனிஸ்ட்… விளாசிய செல்லூர் ராஜு …

2 சீட் மற்றும் சில கோடிகளுக்காக திமுகவிடம் கட்சியை அடமானம் வைச்சவங்கதான் கம்யூனிஸ்ட்… விளாசிய செல்லூர் ராஜு …

மதுரை;

மொழிப்போர் தியாகிகளின் வீரவணக்க நாளை முன்னிட்டு மதுரை தமுக்கம் மைதானம் பகுதியில் அமைந்துள்ள தமிழன்னை சிலைக்கு அதிமுகவின் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு  மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசும் போது,

திமுக மொழிப்போர் தியாகிகளுக்கு வீரவணக்கம் கொண்டாட உள்ளோம் என்று அறிவித்துள்ளார்கள். தமிழ் மொழிக்காக அவர்கள் எதுவும் செய்ததில்லை. போட்டிக்காக கோயம்புத்தூரில் செம்மொழி மாநாடு நடத்தினார்கள் முழுக்க முழுக்க திமுக குடும்பம் தான் அந்த மாநாட்டில் இருந்தது. அந்த மாநாட்டை உலக தமிழ் சங்கம் ஏற்றுக்கொள்ளவில்லை.

திமுகவும் காங்கிரஸ் இயக்கமும் தான் நீட் தேர்வை கொண்டு வந்தது. உச்சநீதிமன்றத்தில் வாதாடியது திமுக கூட்டணி கட்சியில் இருக்கும் பா சிதம்பரத்தின் மனைவி நளினி சிதம்பரம் தான் வாதாடி நீட் தேர்வை நிரந்தரமாக வருவதற்கு காரணமாக இருந்தவர்.

அனிதா என்ற மாணவி இறந்ததற்கு வைகோ, திருமாவளவன் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்காளர்கள் போராட்டம் செய்தார்கள். தற்போது 12 பேர் இந்த திமுக ஆட்சிக் காலத்தில் இறந்துள்ளார்கள்.

அவர்களை பற்றி யாராவது பேசுகிறார்களா?வைகோ இது குறித்து பேசுகிறாரா?இந்த இந்த திமுக அரசை கண்டித்து யாராவது பேசுகிறார்களா என்பதை எண்ணிப் பார்க்க வேண்டும்.நீட் தேர்வில் அன்றைய தினம் வாய்மூடி மௌனமாக இருந்தது திமுக.

நாடாளுமன்றத்தில் 39 பேர் திமுக கூட்டணியில் இருக்கிறார்கள். ஒன்றும் செய்யாமல் அமர்ந்திருக்கிறார்கள். நீட் தேர்வுக்காக பாராளுமன்றத்தை இதுவரை இவர்கள் முடக்கி இருக்கிறார்களா?

நாளை வரும் நாடாளுமன்ற தேர்தலுக்காக இரண்டு சீட்டு மூன்று சீட்டு மற்றும் கோடி ரூபாய்க்காக தங்கள் கொள்கைகளை அடமானம் வைத்திருக்கக்கூடிய கம்யூனிஸ்ட் கட்சிகள் மொழிப்போர் தியாகிகளுக்கான வீரவணக்க நாள் கூட்டத்தில் ஆவது இனிமேல் தமிழக மக்களுக்கு நல்லது செய்ய குரல் கொடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன் என்று பேசினார்.

Leave a Reply