காமாலை கண் , இஞ்சி தின்ற மங்கி, உளறல் பேச்சாளர் …ஜெயக்குமாரை விளாசிய மக்கள் நீதி மையம் …

காமாலை கண் , இஞ்சி தின்ற மங்கி,  உளறல்  பேச்சாளர் …ஜெயக்குமாரை விளாசிய மக்கள் நீதி மையம் …

சென்னை;

மக்கள் நீதி மய்யம் தொழிலாளர் நல அணி மாநில செயலாளர் பொன்னுசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில்;-

நடைபெற உள்ள ஈரோடு கிழக்கு சட்டமன்ற இடைத்தேர்தலில் மதவாத சக்திகள் வெற்றி பெற்று விடக்கூடாது என்பதால் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் போட்டியிடும் காங்கிரஸ் மூத்த தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் அவர்களை ஆதரிக்கும் முடிவை எடுத்துள்ள மக்கள் நீதி மய்யத்தையும், எங்களது தலைவர் கமல்ஹாசன் திமுகவின் Bடீம் எனவும், பூனைக்குட்டி வெளியே வந்து விட்டது என விமர்சனம் செய்துள்ள முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறியிருப்பது காமாலை வந்த கண்களுக்கு எல்லாமே மஞ்சளாகத் தான் தெரியும் என்பதைப் போல இருக்கிறது. 

மத்தியில் ஆளுகின்ற, பிரித்தாளும் சூழ்ச்சி, வெறுப்பு அரசியலுக்கு சூத்திரதாரியாக இருந்து வரும் பாஜகவின் B டீமாக அதிமுக இருப்பதாலேயே அக்கட்சியில் அங்கம் வகிக்கும் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரின் கண்களுக்கு நேர்மையின் கொம்பன் கமல்ஹாசன் அவர்களும், மக்கள் நீதி மய்யமும் திமுகவின் பி டீமாக தெரிந்திருக்கிறது.

ஏற்கனவே அதிமுக மூன்று, நான்கு அணிகளாக பிளவுபட்டு, அழிவின் விளிம்பில் இருக்கும் சூழலில் உட்கட்சி விவகாரத்தில் “எதைத் தின்றால் பித்தம் தெளியுமோ..?” என்கிற ரீதியில் “இஞ்சி தின்ற மங்கி போல“:விரக்தியின் உச்சத்தில் இருக்கும் ஜெயக்குமார் மக்கள் நீதி மய்யம் குறித்தோ, நம்மவர் கமல்ஹாசன் குறித்தோ விமர்சனம் செய்ய தகுதியற்றவராவார்.

மேலும் தற்போது தமிழ்நாட்டில் உள்ள உள்ள அரசியல் சூழ்நிலையையும், பாஜகவின் பிரித்தாளும் சூழ்ச்சியினால் ஏற்பட்டுள்ள அவசரநிலையையும் கருத்தில் கொண்டு மக்கள் நீதி மய்யம் நிர்வாகக்குழு மற்றும் செயற்குழுவும், தலைவர் கமல்ஹாசன் அவர்களும் எடுத்துள்ள இந்த முடிவு மதவாத சக்திகளுக்கு அச்சத்தை ஏற்படுத்தியுள்ளதின் வெளிப்பாடாகத் தான் ஜெயக்குமாரின் உளறல் பேச்சு அமைந்துள்ளது.

அதே சமயம் தமிழ்நாட்டில் மதவாத சக்திகளோடு கரம்கோர்த்துள்ள அதிமுகவின் தோல்வி ஈரோடு கிழக்கு சட்டமன்ற இடைத்தேர்தலில் 100% உறுதியான விரக்தியில் ஏற்பட்டுள்ள அச்ச உணர்வின் காரணமாகவும், ஆற்றாமையின் வெளிப்பாடாகவும், தனது வயிற்றெரிச்சலை அடக்க முடியாமல் ஜெயக்குமார் வார்த்தைகளை  கொட்டியிருக்கிறார் என்பது இதன் மூலம் தெளிவாகத் தெரிகிறது.

தங்களை அமைச்சர்களாக்கி அழகு பார்த்த அந்த அம்மையார் ஜெயலலிதாவை காப்பாற்ற திராணியற்ற ஜெயக்குமார், ஈபிஎஸ், ஓபிஎஸ் வகையறாக்களை கொண்ட அதிமுகவினை ஈரோடு கிழக்கு சட்டமன்ற இடைத்தேர்தலில் படுதோல்வி அடையச் செய்து தமிழ்நாடு மக்கள் பாடம் புகட்ட வேண்டும் என்று தான் அம்மையார் ஜெயலலிதா அவர்களின் ஆத்மா விரும்பும் என்பது மறுக்க முடியாத உண்மை என பொன்னுசாமி கூறியுள்ளார். 

Leave a Reply