நேற்று கல்லால் அடி , இன்று தலையில் அடி … அப்பாவி திமுக தொண்டர்களை அடித்து விளையாடும் தமிழக அமைச்சர்கள்…

நேற்று கல்லால் அடி , இன்று தலையில் அடி … அப்பாவி திமுக தொண்டர்களை அடித்து விளையாடும் தமிழக அமைச்சர்கள்…

சேலம் ;

சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே தலைவாசல் பகுதியில் விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதிக்கு திமுக சார்பில் வரவேற்பு அளிக்கும் நிகழ்ச்சி நடந்தது.   கட்சியினர் அமைச்சரை வரவேற்று சால்வை அணிவித்து,  சால்வை கொடுத்துக் கொண்டிருந்தார்கள்.

உதயநிதி ஸ்டாலின் அருகே நகர்புற வளர்ச்சி துறை அமைச்சர் கே. என். நேரு நின்று இருந்தார்.  வரிசையாக திமுக தொண்டர்கள் சென்று உதயநிதிக்கு சால்வை கொடுத்து அவருக்கு வணக்கம் வைத்து விட்டு சென்றார்கள்.

 ஒரு தொண்டர் உதயநிதிக்கு கை கொடுக்க முயன்ற போது அமைச்சர் நேரு அவரின் தலையில் ஓங்கி அடித்து சட்டையை பிடித்து தள்ளினார்.  அப்போதும் ஆத்திரம் தீராமல் பின்பக்கமாக கழுத்தை  பிடித்து அங்கிருந்து தள்ளினார்.

இதை பார்த்து பதறிய உதயநிதி,   அமைச்சரிடம் ஏண்ணே இப்படி.. இல்ல வேண்டாம்  என்று சமாதானப்படுத்தினார்.   இந்த வீடியோ வலைத்தளங்களில் வைரல் ஆகிய வருகிறது.  திமுக தொண்டனை நேற்று ஒருவர் கல்லால் அடிக்கிறார் இன்று ஒருவர் கையால் அடிக்கிறார் . அடிவாங்குவதே அப்பாவி தொண்டனின் நிலை என்று வீடியோவை பார்த்து கமெண்ட் அடித்து வருகின்றார்கள்

Leave a Reply