திமுகவை சேர்ந்த ஒருவர் கையை வெட்டுவேன் என்கிறார், மற்றொருவர் ஆளுநரை கொலை செய்வோம் என்கிறார் ..முதல்வர் அமைதி காக்கும் மர்மம் என்ன… பாஜக கேள்வி

மதுரை;
மதுரையில் நடந்த திறந்த வெளி மாநாட்டில் திமுக பொருளாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான டி. ஆர். பாலு பேசியபோது, ராமர் பாலம் என்பது ஒரு கட்டுக்கதை. சேது சமுத்திர சட்டத்தை தடுத்து நிறுத்துவதற்காகவே இது போன்ற கட்டுக் கதைகளை சொல்லி வருகின்றார்கள் .
என் கட்சித் தலைவரை சீண்டினாலோ எவனாவது ஒருவன் ஐயா வீரமணியின் மீது கை வைத்தாலோ அவன் கையை வெட்டுவேன். இதுதான் என் தர்மம் . அவன் கையை வெட்டுவது தான் என் நியாயம். இது நியாயம் இல்லை என்று நீங்கள் சொல்லலாம். அதை நீதிமன்றத்தில் போய் சொல்லுங்கள் . ஆனால் அதற்கு முன்பே அவன் கையை வெட்டி விடுவேன் என்றார் . டி.ஆர்.பாலுவின் பேச்சு சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது.
இதற்கு தமிழக பாஜக துணைத்தலைவர் நாராயணன் திருப்பதி,
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையின் கையை வெட்டுவேன் என்கிறார் தி மு கவை சேர்ந்த ஒருவர், ஆளுநரை கொலை செய்வோம் என்றும், சட்டசபையில் கொலை செய்தாலும் வழக்கு கிடையாது என்கிறார் திமுக தலைமை நிலையை செயலாளர் ஆர்.எஸ்.பாரதி.
தற்போது கையை வெட்டுவேன் என்கிறார் டி .ஆர்.பாலு. கொலை, வெட்டு, குத்து, கட்டப்பஞ்சாயத்து, ரௌடியிசம், ஆள் கடத்தல் என திமுகவின் அமைச்சர்கள், எம் பி க்கள், எம். எல். ஏ கள் போட்டி போட்டு குரல் கொடுப்பது வெட்கக்கேடானது. முதலமைச்சரின் செவிகள் அடைக்கப்பட்டுள்ளதா? கண்களை மூடி அமைதி காக்கும் மர்மம் என்ன? என்று கேட்டுள்ளார் .