கமலிடம் ராகுல் சொன்னதெல்லாம் பொய்..  போட்டுடைத்த மத்திய அமைச்சர் …

கமலிடம் ராகுல் சொன்னதெல்லாம் பொய்..  போட்டுடைத்த மத்திய அமைச்சர் …

டெல்லி:

இந்தியாவின் நிலப்பகுதியை சீனா ஆக்கிரமித்துவிட்டதாக மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசனுக்கு அளித்த பேட்டியில் மூத்த காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்திருந்ததை மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் திட்டவட்டமாக நிராகரித்துள்ளார்.

ராகுல் காந்தியின் இந்த பேட்டிக்கு பதில் அளிக்கும் வகையில் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் கூறியிருப்பதாவது:

சீனா விவகாரத்தில் சிலர் திட்டமிட்டே பொய்யான தகவல்களை பரப்புகின்றனர். அண்மையில் சிலர் உண்மைக்கு மாறான தகவல்களை அரசியலுக்காக தெரிவித்திருந்தனர்.

கடந்த ஆண்டு ராகுல் காந்தி பேசுகையில், நமது நாட்டின் 100 சதுர கிலோ மீட்டர் நிலப்பரப்பை சீனா ஆக்கிரமித்துவிட்டது. இதனை எப்படி பிரதமர் மோடி மீட்பார் என கேள்வி கேட்டிருந்தார். ஆனால் அண்மையில் சீனா 2,000 சதுர கிலோ மீட்டர் நிலப்பரப்பை ஆக்கிரமித்துவிட்டது. பிரதமர் மோடி எதுவும் செய்யாமல் இருக்கிறார் என்கிறார் ராகுல் காந்தி.

1962-ம் ஆண்டு சீன யுத்தத்தை குறிப்பிட்டு பேசுகின்றனர். ஆனால் உண்மையை மக்களிடம் சொல்வது இல்லை. திட்டமிட்ட உள்நோக்கத்துடனேயே இப்படியான பொய்யை மக்களிடம் சிலர் பரப்பி விடுகின்றனர்.

சீனா குறித்து அவர்கள் ஏன் தவறான தகவலை பரப்புகின்றனர்? அவர்களுக்கு ஏன் நமது நாடு மீது நம்பிக்கை இல்லை? ஏன் மக்களை தவறாக வழிநடத்துகின்றனர்? இதற்கு எல்லாம் நாம் எப்படி பதில் சொல்வது? ஏனெனில் அவர்களது அரசியல் என்ன என்பது எனக்கு நன்றாகவே தெரியும்.

சீனா தொடர்பாக ஏதேனும் தகவல் தேவை என்றால் நாம் சீனாவிடம் கேட்க மாட்டோம். நமது ராணுவ தளபதியிடம்தான் கேட்போம். ( சீன தூதரை ராகுல் காந்தி 2 முறை சந்தித்ததாக காங்கிரஸ் தெரிவித்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது) இவ்வாறு மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்தார்.


Leave a Reply