பெண் போலீஸ் கன்னத்தில் ”பளார்” விட்ட வழக்கறிஞர் கைது… பரபரப்பு ..

பெண் போலீஸ் கன்னத்தில் ”பளார்” விட்ட  வழக்கறிஞர் கைது… பரபரப்பு ..

சிவகாசி;

விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் போக்குவரத்து போலீசாக பணிபுரிபவர் ராஜம்மாள். இவர் நேற்று இரவு சிவகாசி முருகன் கோவில் அருகே போக்குவரத்தை சீர்செய்யும் பணியில் ஈடுபட்டிருந்தார்.

அப்போது, திருத்தங்கல் சாலையில் இளைஞர்கள் சிலர் போக்குவரத்துக்கு இடையூராக தகராறு செய்வதாக, போலீஸ் ராஜம்மாளுக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில் ராஜம்மாள் அங்கு சென்று தகராறில் ஈடுபட்டவர்களை சமாதானம் செய்ய முயன்றார்.

அப்போது, வழக்கறிஞர் முத்து மணிகண்டன் என்பவர் பெண் போலீஸ் ராஜம்மாளின் கன்னத்தில் அறைந்துள்ளார்.

இது குறித்து தகவல் அறிந்த சிவகாசி டவுன் காவல் நிலைய போலீசார், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து முத்துமணிகண்டனை கைது செய்தனர். தொடர்ந்து, அவரை காவல் நிலையம் அழைத்துச்சென்று விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில் , அவர் மீது அடிதடி, கொலை மிரட்டல் விடுத்தல் உள்ளிட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளது தெரியவந்தது.

Leave a Reply