அமைச்சர் உதயநிதி நிகழ்ச்சியில் தேசிய கீதத்தை அவமதித்த எஸ் ஐ…. அதிரடி சஸ்பென்ட் …

அமைச்சர் உதயநிதி நிகழ்ச்சியில் தேசிய கீதத்தை அவமதித்த எஸ் ஐ…. அதிரடி சஸ்பென்ட் …

நாமக்கல்:

நாமக்கல் மாவட்டம் பொம்மை குட்டை மேட்டில் கடந்த 28ஆம் தேதி அரசு சார்பில் நலத்திட்ட உதவிகளை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், பொதுமக்களுக்கு அரசின் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

இந்த நிகழ்ச்சியில் பலருக்கும் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. அமைச்சர் வருகை காரணமாக நிகழ்ச்சிக்கு போலீசார் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. அங்கு நாமக்கல் ஆயுதப்படை காவல் உதவி ஆய்வாளர் சிவப்பிரகாசம் என்பவர் பாதுகாப்புப் பணியில் ஈட்டுப்பட்டிருந்தார்.

இந்த நிகழ்ச்சியின் இறுதியில் தேசிய கீதம் இசைக்கப்பட்டது. இருப்பினும், அப்போது சிவப்பிரகாசம் எழுந்து நிற்காமல் உட்கார்ந்தபடியே செல்போனில் பேசிக் கொண்டிருந்தார்.

தேசிய கீதம் இசைக்கப்படும் போது, அதைக் கூட அறியாமல் அவர் மொபைலில் பேசிக் கொண்ட இருந்துள்ளார். பேசி முடித்த பின்னரே மெல்லச் சாவகாசமாக எழுந்து நின்றுள்ளார். காவல் உதவி ஆய்வாளர் சிவப்பிரகாசத்தின் இந்த செயலை அங்கிருந்த சிலர் வீடியோவாக எடுத்து, அதை இணையத்தில் வெளியிட்டனர்.

போலீஸ் அதிகாரி ஒருவரே தேசிய கீதத்தை மதிக்காமல் இருக்கும் வீடியோ இணையத்தில் படுவேகமாக பரவியது.

போலீஸ் அதிகாரியின் இந்த செயலுக்கு இணையத்தில் பலரும் கடும் எதிர்ப்புகளைப் பதிவு செய்து வருகின்றனர். இந்தச் சூழலில் தேசிய கீதத்திற்கு எழுந்து மரியாதை செலுத்தாத சிவபிரகாசத்தை பணியிடை நீக்கம் செய்து மாவட்ட எஸ்பி கலைச்செல்வன் உத்தரவிட்டுள்ளார்.‌

Leave a Reply