ஈரோடு இடைதேர்தல் இபிஎஸ் அணியின் வேட்பாளர்அறிவிப்பு .. யார் இந்த கே.எஸ். தென்னரசு ? …

ஈரோடு இடைதேர்தல் இபிஎஸ் அணியின் வேட்பாளர்அறிவிப்பு .. யார் இந்த கே.எஸ். தென்னரசு ? …

சென்னை:

ஈரோடு கிழக்கு தொகுதியின் இடைத்தேர்தல் பிப்ரவரி 27ஆம் தேதி நடைபெறுகிறது. இந்த தேர்தலில் திமுக கூட்டணி சார்பில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான ஈவிகேஎஸ் இளங்கோவன் போட்டியிடுகிறார்.

தற்போது அதிமுக இரு அணிகளாக பிரிந்துள்ளது. அதில் எடப்பாடி பழனிசாமி தரப்பு யாரை வேட்பாளராக அறிவிக்கும் என்ற எதிர்பார்ப்பு எழுந்தது. இந்த நிலையில் அதிமுகவின் எடப்பாடி தரப்பு சார்பில் முன்னாள் அமைச்சர் கே.வி.ராமலிங்கம், முன்னாள் எம்எல்ஏ கே.எஸ்.தென்னரசு, நந்தகுமார் ஆகிய மூவரில் ஒருவர் என அனுமானிக்கப்பட்டது.

ஈரோடு கிழக்கு தொகுதி இந்த நிலையில் ஈரோடு கிழக்கு தொகுதிக்கு யார் வேட்பாளர் என்ற கேள்விக்கு முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் நேற்றைய தினம் கூறுகையில் நாளை (இன்று) மகிழ்ச்சிகரமான செய்தி வரும் என கூறியிருந்தார். இந்த நிலையில் ஈரோடு கிழக்கு தொகுதியின் அதிமுக வேட்பாளராக முன்னாள் எம்எல்ஏ கே.எஸ்.தென்னரசு அறிவிக்கப்பட்டுள்ளார்.

கே.எஸ். தென்னரசு கடந்த 2001 , 2016 ஆகிய ஆண்டுகளில் நடந்த சட்டசபை தேர்தலில் ஈரோடு கிழக்கு தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இவர் ஈரோடு மாநகர் மாவட்ட எம்ஜிஆர் மன்றச் செயலாளராக தென்னரசு இருக்கிறார்.

தென்னரசு 25 ஆண்டுகளாக ஈரோடு சுமை தூக்குவோர் மத்திய சங்க பொதுச் செயலாளராக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது .

Leave a Reply