ஆவேச கேள்வி கேட்ட விசிக கவுன்சிலர்.. பதிலடி கொடுத்து சரண்டராகிய திமுக கவுன்சிலர் …

சேலம் ;
சேலம் மாநகராட்சி மேயர் ராமச்சந்திரன் தலைமையில் மாநகராட்சி கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் 44 வது வார்டு விடுதலை சிறுத்தைகள் கட்சி கவுன்சிலர் இமயவர்மன் பேசும்போது, யூடியூப் சமூக வலைத்தள சேனலில் மாநகராட்சி கவுன்சிலர், மேயர், கமிஷனர் என்று ஒட்டுமொத்த நிர்வாகத்தையும் ஆபாச வார்த்தைகளை பயன்படுத்தி அவதூறு பரப்புகின்றார்கள்.
சம்பந்தப்பட்ட அந்த சேனல் மீது வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தார். அதற்கு திமுக 28 வது வார்டு கவுன்சிலர் ஜெயக்குமார் எழுந்து, அப்படியென்றால் முதலில் இமயவர்மன் மீதுதான் வழக்குப்பதிவு செய்ய வேண்டும். கூட்டணியில் இருந்து கொண்டே கூட்டணி தர்மத்தை மீறும்படி அவர் செயல்படுகிறார்.
வாட்ஸப்பில் மாநகராட்சி நிர்வாகம், முதல்வர், அரசு, சேலம் எம்எல்ஏ ஆகியோருக்கு அவப்பெயர் ஏற்படுத்துகின்ற வகையில் செயல்படுகின்றார். அதனால் இமயவர்மன் மீது தான் முதலில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தார்.
ஜெயக்குமார் இப்படி பேசியதும் திமுக கவுன்சிலர்கள் எல்லோரும் ஜெயக்குமார் பேச்சுக்கு ஆதரவு தெரிவித்து இமயவர்மனுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தார்கள். உடனே எழுந்த இமயவர்மன் கூட்டணியில் விசிக தனி கட்சியாக இருக்கிறது. எங்களை எந்த கட்சியாலும் கட்டுப்படுத்த முடியாது என்றார் ஆவேசமாக,
அதற்கு ஜெயக்குமார், அப்படி என்றால் கூட்டணியில் இருந்து வெளியேற வேண்டியதுதானே? கூட்டணியில் இருந்து கொண்டே ஏன் அவதூறு பரப்புகிறீர்கள்? என்று ஆவேசப்படவும், தவறுக்கு தலை வணங்குகிறேன்.
இனிமேல் இதுபோல் நடக்காது என்று சொல்லி கப்சிப் ஆகிவிட்டார் இமயவர்மன்.