இது பட்ஜெட் இல்லை … ஒரு மளிகை கடைக்காரரின் பில்… சு.சாமி கிண்டல் ..

டெல்லி ;
மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் நாட்டின் 2023 -2024 ஆம் ஆண்டிற்கான பட்ஜெட்டை தாக்கல் செய்தார். இந்த ஆட்சியின் கடைசி முழு நேர பட்ஜெட் இது என்று நாட்டின் வரவு செலவு திட்டங்களை மத்திய நிதியமைச்சர் ஆண்டுக்கு ஒரு முறை அறிக்கையாக தாக்கல் செய்வார். இதை மத்திய பட்ஜெட் என்று அழைக்கப்படுகிறது.
கூட்டத்தொடரில் முதல் அமர்வு அடுத்த மாதம் 13ஆம் தேதி வரை நடைபெற இருக்கிறது. இரண்டாவது அமர்வு மார்ச் 13ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் மாதம் ஆறாம் தேதி வரை நடைபெற இருக்கிறது. இதற்கிடையில் மத்திய அரசின் நிதிநிலை அறிக்கை தொடர்பாக அரசியல் கட்சி தலைவர்கள் கருத்து தெரிவித்துள்ளார்கள்.
பாஜக பூத்த தலைவர் சுப்பிரமணியசாமி தனது டுவிட்டர் பக்கத்தில்,
இன்று தாக்கல் செய்யப்பட்டு இருப்பது பட்ஜெட் அல்ல. இது ஒரு மளிகை கடைக்காரரின் பில் என்று கடுமையாக சாடி இருக்கிறார்.
அவர் மேலும், ஒரு சராசரியான பட்ஜெட் குறிக்கோள்கள் என்ன என்பதை வெளிப்படுத்த வேண்டும் என்று சொல்லும் சுப்பிரமணியசாமி , எடுத்துக்காட்டாக ஜிடிபி வளர்ச்சி விகிதம் என்றால் முதலீட்டின் நிலை மற்றும் வருவாய் விகிதத்தில் முன்னுரிமைகள் பொருளாதார உத்தி மற்றும் பலன்களை திரட்டுதல் பற்றி தெரிவிக்க வேண்டும் என்று கூறியிருக்கிறார்.