மெரினாவில பேனா வர்ற வரை காத்திருக்க மாட்டேன் … தனது வீட்டில் 16 அடி உயரத்தில் பேனா சின்னம் வைத்த திமுக தொண்டர்.. வைரலாகும் வீடியோ ..

மெரினாவில பேனா வர்ற வரை காத்திருக்க மாட்டேன் … தனது வீட்டில் 16 அடி உயரத்தில் பேனா சின்னம் வைத்த திமுக தொண்டர்.. வைரலாகும் வீடியோ ..

சென்னை;

மெரினாவில் கருணாநிதி நினைவாக பேனா நினைவு சின்னத்தை அமைக்க கடும் எதிர்ப்பு கிளம்பிய நிலையில், திமுக தொண்டர் ஒருவர் வீட்டில் பேனா நினைவு சின்னத்தை அமைத்தது தற்போது வைரலாகி வருகிறது.

மறைந்த முன்னாள் தமிழக முதல்வர் கலைஞர் நினைவாக கடற்கரையில் பேனா நினைவு சின்னம் அமைப்பது தொடர்பாக சென்னையில் கருத்து கேட்பு கூட்டம் நடைபெற்றது.

இந்தக் கூட்டத்தில் பங்கேற்றவர்கள் பெரும்பாலும் பேனா நினைவு சின்னத்தை கடலில் வைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.

இந்த நிலையில், சென்னை ஆதம்பாக்கத்தில் திமுக தொண்டர் பிரபாகரன் என்பவர் தனது இல்லத்தில் கலைஞர் கருணாநிதி நினைவாக 16 அடி உயரத்தில் பைபர் மற்றும் சில்வர் கலந்த கலைஞர் பேனா சின்னத்தை செதுக்கியுள்ளார். இது திமுக தொண்டர்கள் இடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இது தொடர்பான வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Leave a Reply