ஈரோடு இடைதேர்தல் ; போட்டிக்கு பாஜக வந்தாலும் நாங்க ரெடி … ஜெயக்குமார் திட்டவட்டம்….

சென்னை;
தமிழக தலைமை தேர்தல் அதிகாரியை சந்தித்த பின் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களுக்கு பேட்டியளிக்கையில்;-
ஈரோடு கிழக்கு தொகுதியில் 238 பூத்களிலும் வாக்காளர் இல்லாமலே திமுகவினர் 30 ஆயிரம் முதல் 40 ஆயிரம் வாக்குகள் போலியாக தயாரித்துள்ளனர். அதை சரிபார்க்க வேண்டும் என வலியுறுத்தி உள்ளோம்.
அதேபோல், ரயில்வே காலனியில் உள்ள 180 வாக்குகள் பல்வேறு பகுதிகளுக்கு இடம் மாறி சென்றிருந்தாலும் இன்னும் வாக்கு அங்கே வாக்குகள் உள்ளது. இதையும் சரி பார்க்க வேண்டும் என்று கூறியுள்ளோம்.
மேலும், ஓபிஎஸ் ஒரு மண்குதிரை. அது கரை சேராது. சிறிய தவறு காரணமாக, ஈரோடு கிழக்கு தேர்தல் பணிமனையில் 3 விதமான பெயர்கள் மாற்றம் செய்யப்பட்டது.
மாநிலத்தை பொருத்தவரை எங்கள் தலைமையில் கூட்டணி தொடர்கிறது. பாஜக வேட்பாளரை நிறுத்தினாலும் நாங்கள் முன்வைத்த காலை பின் வைக்க மாட்டோம் என ஜெயக்குமார் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். பாஜக போட்டியிட்டால் தங்களது வேட்பாளர் வாபஸ் என ஓபிஎஸ் கூறிய நிலையில் ஜெயக்குமார் இதுபோன்று கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.