பெண்ணை தாக்கி கொலைமிரட்டல் விடுத்த அதிமுக நகர செயலாளர் கைது…

ஈரோடு:
புஞ்சைபுளியம்பட்டி அருகேவுள்ள புதுப்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர், மனோகரன். இவரது மனைவி கீதா (39).
இவர், புஞ்சை புளியம்பட்டி அதிமுக நகர செயலாளர் மூர்த்தி மீது புஞ்சைபுளியம்பட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
அதில், “அதிமுக நகர செயலாளர் மூர்த்தி என்னை தாக்கி, கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.
ஆகையால் என்னை தாக்கி கொலை மிரட்டல் விடுத்த அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
இதையடுத்து, மூன்று பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர், அதிமுக நகர செயலாளர் மூர்த்தியை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.