ராயல் கேர் மருத்துவமனை சார்பில் பெண்கள் நலம் சமூக நலத்திட்டம் குளத்தூரில் துவக்கம்….

கோவை:
பெண்கள் வீடு, சமுதாயம் மற்றும் நாட்டின் வளர்ச்சிக்கு முதுகெலும்பாக திகழ்கிறார்கள். இவர்கள் ஆற்றிவரும் மகத்தான பணிகளுக்கு மதிப்பு மற்றும் கௌரவம் அளிக்கும் வகையில் ராயல் கேர் மருத்துவமனை தலைவர், டாக்டர். கே. மாதேஸ்வரன் அவர்கள் “பெண்கள் நலம் “என்னும் சமூக நலத் திட்டத்தை துவக்கி உள்ளார். இத்திட்டத்தின் முக்கிய அம்சம் இலவச மருத்துவ பரிசோதனை மற்றும் ஆலோசனைகளை அவர்கள் வசிக்கும் கிராமத்திற்கே சென்று அளிப்பதாகும். இதன் முதல்கட்டமாக கோவையில் குளத்தூர் மற்றும் நீலாம்பூர் பகுதிகளை தேர்ந்தெடுத்து அதில் குளத்தூர் பகுதியில் சமீபத்தில் துவக்க விழா நடைபெற்றது.

இத்திட்டத்தின் மூலம் மகளிர் மற்றும் மகப்பேறு மருத்துவ நிபுணர்கள் குழு முகாமில் பங்கேற்பவர்களுக்கு , எடை, உயரம் ,இரத்த அழுத்தம் ,இரத்தத்தில் சர்க்கரை அளவு ,மார்பக பரிசோதனை , புற்றுநோய் மருத்துவர் மற்றும் அறுவை சிகிச்சை நிபுணரின் ஆலோசனைகள் அளிக்கப்படுகிறது. முகாமில் பங்கு பெறுவோரில் மெமோகிராம் என்னும் மார்பக பரிசோதனை தேவைப்படுவோருக்கு ராயல் கேர் மருத்துவமனையில் இலவசமாக அளிக்கப்படும். பேப்ஸ்மியர் என்னும் கர்பப்பை புற்றுநோய் பரிசோதனை சலுகை கட்டணத்தில் அளிக்கப்படும் . இம்முகாமில் பங்கு பெறுவோருக்கு பிற பரிசோதனைகள் தேவைப்பட்டால் சலுகை கட்டணத்தில் அளிக்கப்படும்.

சமீபத்தில் குளத்தூரில் நடைபெற்ற பெண்கள் நலத் துவக்க விழாவில் ராயல் கேர் மருத்துவமனையின் புற்றுநோய் சிகிச்சை நிபுணர் டாக்டர் .N.சுதாகர்,குளத்தூர் தலைவர் திருமதி.சாவித்திரி கலந்துகொண்டு துவக்கிவைத்தனர் அப்போது குளத்தூர் மற்றும் வெங்கிட்டாபுரம் வார்டு உறுப்பினர்கள் உடனிருந்தனர்.

ராயல் கேர் மருத்துவமனையின் மகளிர் மற்றும் மகப் பேறு மருத்துவர் டாக்டர்.S.கலைவாணி முகாமில் கலந்துகொண்டு நூறுக்கும் மேற்பட்டோருக்கு இலவச மருத்துவ பரிசோதனை மற்றும் ஆலோசனை அளித்தார். மேலும் கலந்துகொண்ட பயனாளிகளுக்கு புற்றுநோய் நிபுணர் டாக்டர்.N.சுதாகர் மற்றும் மகளிர் மகப்பேறு மருத்துவர் டாக்டர்.N.பிரேமலதா அவர்கள் கவுன்சிலிங் / ஆலோசனை வழங்கினார்கள். இத்தொடர் முகாம் பிரதி மாதம் இரண்டாம் மற்றும் நான்காம் புதன்கிழமைகளில் நீலாம்பூர் மற்றும் குளத்தூர் கிராமங்களில் தொடர்ந்து நடைபெறும்.