கூட்டத்துக்கு வர்றவங்களுக்கு டோக்கன் என ஆட்களை திரட்டிய திமுகவினர்… பெரிய பரிசு என்று வந்து இறுதியில் கிடைத்த பரிசை கண்டு கடுப்பான பெண்கள் ..

கூட்டத்துக்கு வர்றவங்களுக்கு டோக்கன் என ஆட்களை திரட்டிய திமுகவினர்… பெரிய பரிசு என்று வந்து இறுதியில் கிடைத்த பரிசை கண்டு கடுப்பான பெண்கள் ..

தேனி :

அண்ணா நினைவு தினத்தில் அண்ணா சிலைக்கு மாலை அணிவிக்க கூட்டம் இல்லாததால், அவ்வழியே சென்ற பொதுமக்களிடம் கூட்டத்திற்கு வந்தால் பரிசு டோக்கன் கிடைக்கும் என கூறி திமுகவினர் கூட்டம் சேர்த்தனர் .

தமிழக முன்னாள் முதல்வர் பேரறிஞர் அண்ணாவின் 54வது நினைவு தினத்தை முன்னிட்டு தேனி மாவட்டம் பெரியகுளம் பழைய பேருந்து நிலையத்தில் உள்ள அண்ணாவின் சிலைக்கு பெரியகுளம் சட்டமன்ற உறுப்பினர் சரவணன், தேனி வடக்கு மாவட்ட செயலாளர் தங்கதமிழ்செல்வன் உட்பட திமுகவினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

திமுக சார்பில் கூட்டம் கூட்டவேண்டும் என்பதற்காக பொதுமக்களிடம் கூட்டத்திற்கு வரும் அனைவருக்கும் பரிசு கிடைக்கும் என பெண்கள் உட்பட பலரிடம் திமுகவினர் சொல்ல, ஏதோ பெரிதாக இருக்கும் என நம்பி வந்த அனைவருக்கும் கொடுக்கப்பட்ட டோக்கன் தான் பெரிய கடுப்பை உருவாக்கியது.

பெரிதாக ஏதோ பரிசு பொருள் கிடைக்கும் என நம்பி வந்த அனைவரிடமும், அந்தக் கடையில் டீ குடிக்க டோக்கன் வாங்கி செல்லுங்கள் என்றனர் திமுகவினர்., இதனால் கடுப்பான பெண்கள் ‘இந்த டீ வடைக்காகவா வந்தோம்’, என்றவாறே முணுமுணுத்த படி கலைந்து சென்றனர்.

Leave a Reply