5 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிடமாற்றம். தமிழக அரசு அதிரடி ..

5 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிடமாற்றம். தமிழக அரசு அதிரடி ..

சென்னை;

தமிழ்நாட்டில் அண்மையில் அதிரடியாக ஐஏஏஸ் அதிகாரிகள் பணியிடமாற்றம் செய்யப்பட்ட நிலையில், தற்போது ஐபிஎஸ் அதிகாரிகள் 5 பேர் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். 

இதுதொடர்பாக தமிழக அரசு தெரிவித்துள்ள செய்திக்குறிப்பில்,

“சென்னை கொளத்தூர் துணை ஆணையர் ராஜாராம் கடலூர் எஸ்பியாக நியமிக்கப்பட்டுள்ளார். கடலூர் எஸ்பி. சக்தி கணேசன், சிலைக்கடத்தல் தடுப்பு குற்ற புலனாய்வு எஸ்பியாக நியமனம்.

ராணிப்பேட்டை எஸ்பி தீபா சத்யன், மாநில காவல்துறை முதன்மை கட்டுப்பாட்டு அறை எஸ்பியாக நியமனம்.

சென்னை சைபர் கிரைம் பிரிவு துணை ஆணையர் கிரண் ஸ்ருதி ராணிப்பேட்டை எஸ்.பியாக நியமனம். காத்திருப்போர் பட்டியலில் இருந்த ரவுளி ப்ரியா, தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு வாரியத்தின் எஸ்.பியாக நியமனம்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

Leave a Reply