பேனா வேணா.. கடல் அன்னை கூறுவது போல மாவட்டமெங்கும் போஸ்டர் ஒட்டிய பாஜகவினர் …

பேனா வேணா.. கடல் அன்னை கூறுவது போல மாவட்டமெங்கும் போஸ்டர் ஒட்டிய பாஜகவினர் …

புதுக்கோட்டை:

 தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் இலக்கிய பணிகளை சிறப்பிக்கும் வகையில், சென்னை மெரினா கடற்கரையில் உள்ள அவரது நினைவிடத்திற்கு அருகே, கடலில் 81 கோடி ரூபாய் மதிப்பீட்டில் பேனா நினைவுச் சின்னம் அமைக்க தமிழ்நாடு அரசு முடிவு செய்துள்ளது.

கலைஞர் பேனா நினைவுச் சின்னம்’ என பெயரிடப்பட்டுள் இந்த பேனா சிலை அமைப்பதற்கு அதிமுக, பாஜக, நாம் தமிழர் கட்சி உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

எனவே இது குறித்து சமூக ஆர்வலர்கள், அரசியல்வாதிகள் மற்றும் பொதுமக்களிடம் கருத்து கேட்பு கூட்டமும் நடைபெற்றது. அதில் பேனா வைப்பது குறித்து பலத்த எதிர்ப்பு கிளம்பியது .

இதனிடையே அனைத்து விதமான ஒப்புதல்களுக்கு பின்னரே பேனா சிலை அமைப்பது குறித்து முடிவெடுக்கப்படும் என மாநில பொதுப் பணித்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் புதுக்கோட்டை மாவட்டம் பாஜக அரசு தொடர்பு பிரிவு சார்பில் ‘பேனா வேணா’ என்ற தலைப்பில்  மாவட்டமெங்கும் போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது. அதில் கடல் அன்னை எழுந்தருளிய நிலையில், ‘பேனா வேணா’ என்று கடல் அன்னை கூறுவதாக அமைந்துள்ளது.

இந்த போஸ்டருக்கு திமுக சார்பில் நிச்சயம் போஸ்டர் பதிலடி இருக்கும் என்று திமுக தொண்டர்கள் கூறி வருகிகின்றனர்

Leave a Reply