நேற்று வாணி ஜெயராம் இன்று நடிகர் டிபி கஜேந்திரன்… அடுத்தடுத்து நிகழும் மரணங்களால் திரையுலகம் அதிர்ச்சி…

நேற்று வாணி ஜெயராம் இன்று நடிகர் டிபி கஜேந்திரன்… அடுத்தடுத்து நிகழும் மரணங்களால் திரையுலகம் அதிர்ச்சி…

சென்னை;

தமிழ் சினிமாவில் இயக்குனராகவும், நடிகராகவும் இருந்து வந்தவர் டிபி கஜேந்திரன். பிரபல இயக்குனர்களாக இருந்த விசு மற்றும் மோகன் காந்திராமன் ஆகியோரிடம் உதவி இயக்குனராக பணியாற்றியவர்.

இயக்குனராக சினிமாவில் அறிமுகமானாலும் 100-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். 

குணசித்திரம் மற்றும் காமெடி கதாபாத்திரங்களில் அவரின் சிறந்த நடிப்பு ரசிகர்களிடையே பெரிய வரவேற்பை பெற்றது. கமலின் ‘பம்மல் கே சம்பந்தம்’, ‘சீனா தானா’ ஆகிய படங்களின் காட்சிகள் மிகவும் பிரபலமானவை.

இயக்குனராக எங்க ஊரு காவல்காரன், பாட்டு வாத்தியார், பட்ஜெட் பத்மநாபன், மிடில் கிளாஸ் மாதவன் உள்ளிட்ட படங்களில் பணியாற்றியுள்ளார். விசுவை போன்றே குடும்ப பாங்கான திரைப்படங்களையே இயக்கினார். 

சமீபகாலமாக சிறுநீரக பிரச்சினையால் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் உடல் நலக்குறைவால் இன்று மரணமடைந்துள்ளார்.

சென்னை சாலி கிராமத்தில் உள்ள இல்லத்தில் அவரது உடல் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. நேற்றுதான் பின்னணி பாடகி வாணி ஜெயராம் காலமானார். தற்போது டிபி கஜேந்திரன் மரணமடைந்துள்ளது திரையுலகில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  

Leave a Reply