கோவை மாவட்டத்தின் 183-வது ஆட்சியராக பொறுப்பேற்றார் கிராந்திகுமார் பாடி..

கோவை மாவட்டத்தின் 183-வது ஆட்சியராக பொறுப்பேற்றார் கிராந்திகுமார் பாடி..

கோவை;

கோவை மாவட்டத்தின் 183-வது ஆட்சியராக கிராந்தி குமார் பாடி இன்று பொறுப்பு ஏற்றுக்கொண்டார்.

கோவை மாவட்ட ஆட்சியராக பணிபுரிந்து வந்த ஜி.எஸ்.சமீரன், சமீபத்தில் சென்னை மாநகராட்சி இணை ஆணையராக பணியிட மாற்றம் செய்யப்பட்டார். புதிய ஆட்சியராக, திருப்பூர் மாநகராட்சி ஆணையராக பணிபுரிந்த கிராந்திகுமார் பாடி ஐஏஎஸ் நியமிக்கப்பட்டார்.

இதனை தொடர்ந்து, இன்று கோவை ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்த கிராந்திகுமார் பாடியிடம், முன்னாள் ஆட்சியர் சமீரன் முறைப்படி பொறுப்புகளை ஒப்படைத்தார். புதிய ஆட்சியராக பொறுப்பேற்று கொண்ட கிராந்திகுமார் பாடி, கோவை மாவட்டத்தின் 183-வது ஆட்சியர் ஆவார்.

அவருக்கு மாவட்ட வருவாய் அலுவலர் லீலா அலெக்ஸ், துணை ஆட்சியர்கள் கோகிலா, சிவகுமார் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் வாழ்த்து தெரிவித்தனர்.

பதவியேற்புக்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய ஆட்சியர் கிராந்திகுமார் பாடி;

மக்கள் குறைகளை தீர்க்க, அரசின் திட்டங்கள் மக்களுக்கு சேருவதற்கு முழு முயற்சி எடுப்பேன் என்றும், மக்களின் அடிப்படை வசதிகளை பூர்த்தி செய்வேன் என்றும் தெரிவித்தார்.
மேலும், அரசின் நலத்திட்டங்கள் மக்களுக்கு போய் சேருகிறதா? என்பதை அதிகாரிகள் உறுதிசெய்ய வேண்டும் என்று முதல்வர்  அறிவுரை வழங்கியுள்ளதாகவும், அதன்படி அனைத்து திட்டங்களும் மக்களுக்கு போய் உரிய முறையில் சேருகிறதா? என்பதை களத்தில் சென்று நேரில் ஆய்வு செய்வேன் என்றும் ஆட்சியர் கிராந்திகுமார் பாடி கூறினார்.

Leave a Reply