தண்ணீர் பிடிப்பதில் ஏற்பட்ட தகராறு… பக்கத்து வீட்டுக்காரரை அரிவாளால் வெட்டிய சர்வேயர் … பரபரப்பு சம்பவம்

தண்ணீர் பிடிப்பதில் ஏற்பட்ட தகராறு… பக்கத்து வீட்டுக்காரரை அரிவாளால் வெட்டிய சர்வேயர் … பரபரப்பு சம்பவம்

அரக்கோணம் ;

அரக்கோணம் அடுத்த மேல்பாக்கம் ஈஸ்வரன் கோயில் தெருவை சேர்ந்தவர் அருள் (45). இவர் நெமிலி சர்வேயராக பணியாற்றி வருகிறார். இவரது பக்கத்து வீட்டைச் சேர்ந்தவர் கருணாகரன் (55). இவர்களது குடும்பத்துக்கு இடையே கழிவுநீர் கால்வாய், வீட்டுக்கு வெளியில் வெந்நீர் காய வைப்பது தொடர்பாக முன்விரோதம் தகராறு இருந்து வருகிறது.

இந்த நிலையில், மீண்டும் தண்ணீர் பிடிப்பது தொடர்பாக தகராறு ஏற்பட்டது. இது குறித்து அரக்கோணம் டவுன் போலீசில் புகார் தரப்பட்டது. இந்த புகார் மனுவை வாபஸ் பெறுமாறு நில அளவையர் அருள், புகாரை வாபஸ் பெற சொல்லி கருணாகரனை மிரட்டி உள்ளார். ஆனால் கருணாகரன் புகார் மனுவை வாபஸ் பெற மாட்டேன் என தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக மீண்டும் அவர்களுக்கிடையே இன்று அதிகாலை தகராறு ஏற்பட்டது. அப்போது ஆத்திரத்தில் சர்வேயர் அருள், பக்கத்து வீட்டைச் சேர்ந்த கருணாகரனை அரிவாளால் வெட்டினார். மேலும், கருணாகரனின் மனைவி துளசியம்மாளையும் தாக்கியுள்ளார்.

இது தொடர்பாக இரு குடும்பத்தினரும் கட்டை, கத்தி மற்றும் கைகளால் தாக்கி கொண்டனர். இந்த சம்பவத்தில் படுகாயம் அடைந்து கருணாகரன் (55), அவரது மனைவி துளசியம்மாள்(48) ஆகியோர் அரக்கோணம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

மேலும், சர்வேயர் அருள் என்பவரின் மனைவி ஓவியா (36) அவரும் அரக்கோணம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

சர்வேயர் அருள் மீது ஏற்கனவே அரக்கோணம் டவுன் போலீசில் பக்கத்து வீட்டாரிடம் (வேறொரு நபர்) சண்டை போட்டது தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது .

Leave a Reply