எதையும் தொட்டு விடாதீர்கள்… SBI வாடிக்கையாளர்களுக்கு ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா எச்சரிக்க..!!

எதையும் தொட்டு விடாதீர்கள்… SBI வாடிக்கையாளர்களுக்கு ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா எச்சரிக்க..!!

நீங்கள் SBI அக்கவுண்ட் ஹோல்டராக இருந்தால் மோசடி நபர்களின் இலக்கில் சிக்கி பணம் அல்லது உங்களது தனிப்பட்ட விவரங்களை அவர்கள் திருட நேரிடலாம். ஏனென்றால் மோசடி செய்பவர்கள் பணம் மற்றும் தனிப்பட்ட விவரங்களைத் திருட பயன்படுத்தி வரும் புதிய மோசடி முறை குறித்து ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா (SBI) வாடிக்கையாளர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.

அரசாங்க கொள்கைகள், திட்டங்கள், முன்முயற்சிகள் மற்றும் சாதனைகள் பற்றிய தகவல்களை அச்சு மற்றும் மின்னணு ஊடகங்களுக்கு வழங்கும் பிரஸ் இன்ஃபர்மேஷன் பீரோ (PIB – Press Information Bureau), SBI யூஸர்கள்இந்த புதிய SMS மோசடியில் சிக்காமல் இருக்க வேண்டும் என்று எச்சரித்து உள்ளது.

SBI வாடிக்கையாளர்கள் அவர்களின் SBI அக்கவுண்ட் பிளாக் செய்யப்பட்டு உள்ளது என்று வரும் மெசேஜில் எச்சரிக்கையாக மற்றும் கவனமாக இருக்குமாறு PIB அறிவுறுத்தியுள்ளது. மோசடி செய்ய காத்திருக்கும் நபர்கள் இந்த அலெர்ட் டைப் மெசேஜ்களை SMS மூலம் அனுப்புவதாகக் கூறப்படுகிறது.

மேலும் இதுபோன்ற மெசேஜ்கள் அல்லது கால்ஸ்களுக்கு பதிலளிக்க வேண்டாம் என்று கேட்டு கொள்ளப்பட்டுள்ளது. தவிர இது போன்ற மெசஜ்களுடன் இணைக்கப்பட்டிருக்கும் எவ்வித லிங்க்ஸ்களையும் கிளிக் செய்ய வேண்டாம் என்றும் PIB எஸ்பிஐ வாடிக்கையாளர்களை எச்சரித்து உள்ளது.

இது தொடர்பான ட்விட்டில் PIB கூறி இருப்பதாவது, உங்கள் SBI அக்கவுண்ட் பிளாக் செய்யப்பட்டுள்ளதாக புழக்கத்தில் உள்ள ஒரு மெசேஜ் போலியானது (A message in circulation claiming that your @TheOfficialSBI account has been blocked is #FAKE) என்று கூறி உள்ளது.

மேலும் அதே ட்விட்டில் உங்களின் தனிப்பட்ட அல்லது வங்கி விவரங்களை ஷேர் செய்யுமாறு கேட்கப்படும் மின்னஞ்சல்கள்/எஸ்எம்எஸ்-களுக்கு பதிலளிக்க வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

உங்கள் கருத்துக்களை உள்ளிடவும்...

%d bloggers like this: