கோவை மாவட்டத்தில் 57 பள்ளிகளில் ரூ.20.38 கோடி மதிப்பில் புதிய, கூடுதல் வகுப்பறை கட்டும் பணி!!
கலெக்டர் கிராந்திகுமார் பாடி தலைமையில் செய்தியாளர் பயணம் மேற்கொண்டு ஆய்வு…..

கோவை மாவட்டத்தில் 57 பள்ளிகளில் ரூ.20.38 கோடி மதிப்பில் புதிய, கூடுதல் வகுப்பறை கட்டும் பணி!!கலெக்டர் கிராந்திகுமார் பாடி தலைமையில் செய்தியாளர் பயணம் மேற்கொண்டு ஆய்வு…..

கோவை,
கோவை மாவட்ட ஊராட்சிகளில் உள்ள தொடக்கப்பள்ளி மற்றும் நடுநிலைப் பள்ளிகளுக்கு கூடுதல் வகுப்பறை கட்டடங்கள் கட்டும் திட்டத்தின் கீழ் பொள்ளாச்சி வடக்கு ஊராட்சி ஒன்றியம், ராமபட்டிணத்தில் உள்ள ஊராட்சி தொடக்கப்பள்ளி மற்றும் சூலூர் ஊராட்சி ஒன்றியம் பட்டணம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி ஆகிய பள்ளிகளில் கூடுதல் வகுப்பறைகள் கட்டும் பணிகள் நடைபெற்று வருவதை கலெக்டர் கிராந்திகுமார் பாடி தலைமையில் செய்தியாளர் பயணம் மேற்கொண்டு ஆய்வு செய்யப்பட்டது.

ஆய்வின்போது கலெக்டர் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது,

ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் துறையின் சார்பில் ஊராட்சிகளில் உள்ள தொடக்கப்பள்ளி மற்றும் நடுநிலைப் பள்ளிகளுக்கு புதிய மற்றும் கூடுதல் வகுப்பறை கட்டடங்கள் கட்டிட ரூ.800 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு அரசாணை வெளியிடப்பட்டது.

அதன்படி கோவை மாவட்டம் ஆனைமலை வட்டத்தில் 2 பள்ளிகளில் ரூ.1.02 கோடி மதிப்பிலும், அன்னூர் வட்டாரத்தில் 5 பள்ளிகளில் ரூ.1.57 கோடி மதிப்பிலும், காரமடை வட்டாரத்தில் 5 பள்ளிகளில் ரூ.1.60 கோடி மதிப்பிலும், கிணத்துக்கடவு வட்டாரத்தில் 4 பள்ளிகளில் ரூ.1.31 கோடி மதிப்பிலும், மதுக்கரை வட்டாரத்தில் 8 பள்ளிகளில் ரூ.2.55 கோடி மதிப்பிலும், பெரியநாயக்கன்பாளையம் வட்டாரத்தில் 1 பள்ளியில் ரூ.32.2 லட்சம் மதிப்பிலும், பொள்ளாச்சி வடக்கு வட்டாரத்தில் 15 பள்ளிகளில் ரூ.4.81 கோடி மதிப்பிலும், பொள்ளாச்சி தெற்கு வட்டாரத்தில் 8 பள்ளிகளில் ரூ.3.92 கோடி மதிப்பிலும், எஸ்.எஸ்.குளம் வட்டாரத்தில் 2 பள்ளிகளில் ரூ.65.45 லட்சம் மதிப்பிலும், சுல்தான்பேட்டை வட்டாரத்தில் 2 பள்ளிகளில் ரூ.64.06 லட்சம் மதிப்பிலும், சூலூர் வட்டாரத்தில் 3 பள்ளிகளில் ரூ.1.33 கோடி மதிப்பிலும், தொண்டாமுத்தூர் வட்டாரத்தில் 2 பள்ளிகளில் ரூ.64.57 லட்சம் மதிப்பிலும் என மொத்தம் 57 பள்ளிகளில் ரூ.20.38 கோடி மதிப்பீட்டில் புதிய மற்றும் கூடுதல் வகுப்பறை கட்டடங்கள் கட்டும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

அதனைத்தொடர்ந்து, பொள்ளாச்சி வடக்கு ஊராட்சி ஒன்றியம், ராமபட்டிணத்தில் உள்ள ஊராட்சி தொடக்கப்பள்ளியில் ரூ.32.10 லட்சம் மதிப்பிலும், சூலூர் ஊராட்சி ஒன்றியம் பட்டணம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் ரூ.32.20 லட்சம் மதிப்பிலும் கட்டப்பட்டு வரும் கூடுதல் வகுப்பறை கட்டிடங்களை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது என கலெக்டர் கிராந்திகுமார் பாடி செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

இந்த ஆய்வின்போது, பொள்ளாச்சி சார் ஆட்சியர் பிரியங்கா மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Leave a Reply