8 முறை என்னை கொல்ல முயற்சி செய்தார்கள்…ராமதாஸ் பற்றி பேசி திடீர் பரபரப்பை கிளப்பிய திருமாவளவன்….

8 முறை என்னை கொல்ல முயற்சி செய்தார்கள்…ராமதாஸ் பற்றி பேசி திடீர் பரபரப்பை கிளப்பிய திருமாவளவன்….

சென்னை;

எந்த காலத்திலும் பாமக அங்கம் வகிக்கும் கட்சியில் கூட்டணி வைக்க மாட்டோம் என்று விசிக திருமாவளவன் பேசிய பேச்சு மீண்டும் ஹாட் டாப்பிக்காக மாறியுள்ளது.

இது குறித்து திருமாவளவன் கூறியது;

பாமக உடன் என்னைக்குமே விசிக கூட்டணி அமைக்காது… உண்ணாவிரத போராட்டத்துக்கு பிறகு என்னை கொலை செய்ய முயற்ச்சித்தார்கள்.. தமிழகத்தில் நடக்கும் எல்லா காதல் திருமணங்களுக்கும் நான்தான் காரணம் என்று ராமதாஸ் குற்றம்சாட்டினார்.

உடனே தலித்துக்கு எதிராக அனைத்து சமுதாய பேரியக்கத்தை உருவாக்கினார்கள். 32 மாவட்டங்களிலும் கூட்டம் போட்டு திருமாவளவனை ஏன் இன்னும் கொல்லாமல் உயிரோடு வைத்திருக்கிறீர்கள் என்று ஆலோசனை நடத்தினார்கள்.. அதன் அடிப்படையில் 8 இடங்களில் என்னை கொலை செய்ய முயற்சி நடந்தது..

தமிழ்நாட்டில் பெரியார் பிராமணர்களுக்கு அல்லாதோர் என்ற சமூக நீதிக்காக ஒரு இயக்கத்தை உருவாக்கினார்.. ஆனால், ராமதாஸ் தலித் அல்லாதோர் இயக்கத்தை உருவாக்கி மிகப்பெரிய வரலாற்று பிழையை செய்தார்..

அப்படி ஒரு இயக்கத்தை உருவாக்கி என்னை தீர்த்துக்கட்ட எனக்கு எதிராக வன்மத்தை பரப்பியவர்தான் ராமதாஸ்.. ஒருநாளும் விசிக பமாகவுடன் கூட்டணி அமைக்காது என்பதற்கு இதுதான் காரணம்” என்று திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

Leave a Reply