கோவைக்கு ரூ. 9000 கோடி, மதுரைக்கு ரூ. 8500 கோடி செலவில் மெட்ரோ ரயில் திட்டம்..தமிழக நிதியமைச்சர் அறிவிப்பு.

கோவைக்கு ரூ. 9000 கோடி, மதுரைக்கு  ரூ. 8500 கோடி செலவில் மெட்ரோ ரயில் திட்டம்..தமிழக நிதியமைச்சர் அறிவிப்பு.

சென்னை;

கோவையில் மெட்ரோ ரயில் திட்டம் ₹9000 கோடி மதிப்பீட்டில் செயல்படுத்தப்படும் என பட்ஜெட்டில்  நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் அறிவித்துள்ளார். 

அதன்படி,  2023 -24 ம் நிதியாண்டு வரவு – செலவு திட்டத்தில் சென்னை மெட்ரோ ரயில் திட்டத்திற்கு ரூ. 10,000 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.  

சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தின் 2ம் கட்ட பணிகள் ரூ.63,246 கோடி செலவில் 119 கி.,மீ தூரத்திற்கு 3 வழித்தடங்களில் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. தென்னிந்தியாவின் மான்செஸ்டர் நகரமான கோவையில் மெட்ரோ ரயில் திட்டம் ₹9000 கோடி மதிப்பீட்டில் செயல்படுத்தப்படும்.

மதுரையில் ₹8500 கோடி செலவில் மெட்ரோ ரயில் திட்டம் செயல்படுத்தப்படும்.  திருமங்கலம் – ஒத்தக்கடை பகுதிகளுக்கு இடையே மெட்ரோ தோட்டம் செயல்படுத்தப்பட இருக்கிறது.   

பிற மாநிலங்களுடன் ஒப்பிடுகையில் தமிழ்நாட்டில் ரயில்வே போக்குவரத்து பங்களிப்பு குறைவாக உள்ளது; இதை சரி செய்ய, ரயில்வே அமைச்சகம் உடன் இணைந்து புதிய வழித்தடங்களை உருவாக்க புதிய அரசு நிறுவனம் உருவாக்கப்படும்” என்று தெரிவித்தார்..  

Leave a Reply