மருத்துவ குணம் கொண்ட வேப்பம் பூ ரசம் !!

தேவையான பொருட்கள்
வேப்பம் பூ – 2 மேஜைக்கரண்டி
புளி – எலுமிச்சை அளவு
தக்காளி – 1
பச்சை மிளகாய் – 1
பூண்டு – 6 பல்
மஞ்சள் தூள் – 1 தேக்கரண்டி
பெருங்காயத்தூள் – 1 சிட்டிகை
கறிவேப்பில்லை – சிறிது
கொத்தமல்லி – சிறிது
கடுகு – 1 தேக்கரண்டி
வெந்தயம் – 1 தேக்கரண்டி
எண்ணெய் – தேவையான அளவு
ரசப்பொடி – 2 தேக்கரண்டி
உப்பு – தேவையான அளவு
செய்முறை
புளியை தண்ணீரில் போட்டு அரைமணி நேரம் ஊறவைக்கவும். புளியை நன்றாக சாறு வரும் வரையில் நன்றாக கரைத்து ரசம் தயாரிக்கும் பாத்திரத்தில் வடிகட்டி வைத்துக் கொள்ளவும்.
தக்காளி மற்றும் பச்சை மிளகாயை நல்ல பொடியாக அரிந்து வைத்துக் கொள்ளவும்.
இதையும் படியுங்கள்: சப்பாத்திக்கு அருமையான காஷ்மீரி மட்டன் குருமா
(Test)
பூண்டை நன்றாக நசுக்கி வைத்துக் கொள்ளவும்.
புளி கரைசலில் வெட்டிய தக்காளி, பச்சை மிளகாய், நசுக்கிய பூண்டு, உப்பு, மஞ்சள் தூள், பெருங்காயத்தூள், ரசப்பொடி, கறிவேப்பிலை, கொத்தமல்லி போட்டு கையால் நன்றாக பிசைந்துவிடவும்.
தாளிக்கும் கரண்டியில் எண்ணெய் ஊற்றி, கடுகு, வெந்தயம் மற்றும் வேப்பம் பூ போட்டு நன்றாக தாளித்து அந்த பாத்திரத்தில் போடவும்.
இறுதியாக ரச கலவையை அடுப்பில் வைத்து கொதிக்கவிடவும். ஒரு கொதியில் நல்ல நுரையாக எழும்பி வரும்போது சிறிது தண்ணீர் ஊற்றி அடுப்பை அணைத்து விட்டு பாத்திரத்தை இறக்கிவைக்கவும்.
இப்போது மருத்துவ குணம் நிறைந்த வேப்பம் பூ ரசம் ரெடி.
இந்த சுவையான மணமான ரசத்தை சுட சுட சாதத்தில் போட்டு அப்பளம் அல்லது வற்றல் வைத்து சாப்பிடலாம்.
அல்லது சூப் போன்றும் குடிக்கலாம்.