உடல் சூட்டைத் தணித்து, குளிர்ச்சியடைய செய்யும் கம்பு வெஜிடபிள் கஞ்சி!!

உடல் சூட்டைத் தணித்து, குளிர்ச்சியடைய செய்யும் கம்பு வெஜிடபிள் கஞ்சி!!

மிகவும் ஆரோக்கியத்துடன்

தேவையான பொருட்கள்:

கம்பு – அரை கப்,

கேரட் – 2,

பீன்ஸ் – 50 கிராம்,

காலிஃப்ளவர் – ஒன்று சிறியது,

பட்டாணி – கால் கப்,

பட்டை – 2,

ஏலக்காய் – 4,

கிராம்பு – 1,

பிரியாணி இலை – 1,

நல்லெண்ணெய் – 3 ஸ்பூன்,

பூண்டு – 5 பல்,

கடுகு – அரை ஸ்பூன்,

மிளகு – அரை ஸ்பூன்,

சீரகம் – அரை ஸ்பூன்,

மஞ்சள் தூள் – ஒரு சிட்டிகை,

மிளகுத்தூள் – ஒரு ஸ்பூன்,

கொத்தமல்லி தழை – சிறிதளவு

எலுமிச்சை பழம் – பாதி அளவு,

உப்பு – 2 ஸ்பூன்.

செய்முறை:

கேரட், பீன்ஸ், கொத்தமல்லி தழை, காலிஃப்ளவரை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

கம்பினை நன்றாக சுத்தம் செய்து, ஊற வைத்துக் கொள்ளவேண்டும்.

பூண்டை நசுக்கி கொள்ளவும்.

ஊறவைத்த கம்பை குக்கரில் போட்டு அதோடு கேரட், பீன்ஸ், காலிஃப்ளவர், பட்டாணி, இரண்டு கப் தண்ணீர், மிளகு, சீரகம், ஏலக்காய், பிரியாணி இலை, கிராம்பு மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து, குக்கரை மூடி அடுப்பில் வைத்து, இரண்டு விசில் வரும் வரை வேக வைத்துக் கொள்ள வேண்டும்.

குக்கரில் பிரஷர் குறைந்ததும், காய்கறிகளில் சேர்ந்துள்ள பிரியாணி இலையை மட்டும் தனியாக எடுத்துவிட்டு, மற்ற பொருட்கள் அனைத்தையும் மிக்ஸி ஜாரில் சேர்த்து நன்றாக அரைத்துக் கொள்ள வேண்டும்.

ஒரு கடாயை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி எண்ணெய் காய்ந்ததும் கடுகு மற்றும் நசுக்கிய பூண்டை சேர்த்து தாளித்த பின்னர் அரைத்து வைத்துள்ள கஞ்சை சேர்த்து கொதிக்க விடவும்.

கஞ்சி நன்றாக கொதித்தவுடன் இவற்றில் எலுமிச்சைச் சாறு, மிளகுத்தூள், கொத்தமல்லி தழை சேர்த்து கிளறி விட வேண்டும்.

அவ்வளவுதான் சுவையான ஆரோக்கியமான கம்பு வெஜிடபிள் கஞ்சி தயார் ஆகிவிடும்.

கம்பு வெஜிடபிள் கஞ்சி பயன்கள்: கம்பு உடல் சூட்டைத் தணித்து, குளிர்ச்சியடைய செய்கிறது. கம்பில் இரும்புச்சத்து அதிகமாக உள்ளதால் உடல் ஆரோக்கியத்திற்கு துணைபுரிகிறது. இரத்தசோகை உள்ளவர்கள் இந்த கஞ்சியை குடித்து வர மிகவும் ஆரோக்கியமாக இருக்கமுடியும். தூக்கமின்மை, உடல் சோர்வு உடையவர்கள் இதனை சாப்பிட புத்துணர்ச்சி கிடைக்கும். குழந்தைகள் முடிகள் பெரியவர்கள் வரை இந்த கம்பு வெஜிடேபிள் கஞ்சியை அடிக்கடி குடித்து வர உடல் மிகவும் ஆரோக்கியத்துடன் இருக்கும்.

Leave a Reply