பாரம்பரியமிக்க முருகப்பா குழுமத்தி லிருந்து வெளிவரும் மோன்ட்ரா எலக்ட்ரிக் சூப்பர் ஆட்டோ: திருநெல்வேலியில் அறிமுகம்!!

பாரம்பரியமிக்க முருகப்பா குழுமத்தி லிருந்து வெளிவரும் மோன்ட்ரா எலக்ட்ரிக் சூப்பர் ஆட்டோ: திருநெல்வேலியில் அறிமுகம்!!

திருநெல்வேலி,
பெட்ரோல், டீசல் வாகனங்களுக்கு மாற்றாக தற்போது மின்சார வாகனங்களின் தேவை என்பது இந்தியாவில் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் பாரம்பரியமிக்க முருகப்பா குழுமம் தனது புதிய தயாரிப்பான மோன்ட்ரா எலக்ட்ரிக் சூப்பர் ஆட்டோவை திருநெல்வேலியில்அறிமுகம் செய்துள்ளது.

இந்த ஆட்டோவை சோதனை முறையில் சென்னை, திருநெல்வேலி உள்ளிட்ட தமிழகம் முழுவதும் உள்ள வாடிக்கையாளர்கள் ஓட்டிப்பார்க்கும் வசதியை இந்நிறுவனம் வழங்குகிறது. இதர மின்சார ஆட்டோக்களுடன் ஒப்பிடுகையில் மோன்ட்ரா எலக்ட்ரிக் சூப்பர் ஆட்டோ மிகவும் கவர்ச்சிகரமாக தனித்துவமான முறையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

இதை ஒரு முறை சார்ஜ் செய்தால் 197 கிமீ (வழக்கமாக 160 கிமீதூரம்) செல்லும் திறன் கொண்டதாகும்.

மேலும் இதில் சக்தி வாய்ந்த மோட்டார் பொருத்தப்பட்டுள்ளது. இதன் காரணமாக மின்சார வாகன சந்தையில் இதற்கான வரவேற்பு நல்ல முறையில் உள்ளது. திருநெல்வேலியில் உள்ள வாடிக்கையாளர்கள் இந்த ஆட்டோவை சோதனை முறையில் ஓட்டிப்பார்க்க ஆர்ஆர் கிரீன் லைப் மோட்டார்ஸ் ஷோரூமை நேரடியாக அணுகியோ அல்லது ஆன்லைன் மூலம் நிறுவனத்தின் இணையதளம் (https://www.montraelectric.com/test-drive) -ல் முன்பதிவு செய்து கொள்ளலாம்.

இந்த புதிய எலக்ட்ரிக் ஆட்டோ குறித்து இந்நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் கே.கே. பால் கூறுகையில், காற்றுமாசு இல்லாத சுற்றுச்சூழல் பாதுகாப்பில் நாங்களும் இணைந்திருப்பது குறித்தும், எங்களின் புதிய தயாரிப்பை திருநெல்வேலியில் அறிமுகம் செய்வது குறித்தும் நாங்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறோம். எங்களின் சூப்பர் ஆட்டோ புதுமையுடன் பல்வேறு சிறப்பு அம்சங்களை கொண்டுள்ளது.

எனவே அது மின்சார வாகனங்கள் சந்தையில் மிகுந்த வரவேற்பை பெறும் என்பதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம். இந்த ஆட்டோவை வாங்கும் வாடிக்கையாளர்கள் எரிபொருள் மற்றும் பராமரிப்பு சேமிப்பு மூலம், தங்கள் முதலீட்டில் அதிக லாபம் பெறலாம்.

முருகப்பா குழுமத்தின் அனைத்து தயாரிப்புகளும் தரமானவை என்று அனைத்து தரப்பு மக்களாலும் வரவேற்பை பெற்றுள்ளன. அந்த வரிசையில் இந்த ஆட்டோவும் இடம் பிடித்துள்ளது. விற்பனை மற்றும் விற்பனைக்கு பிந்தைய சேவையில் நாங்கள் சிறப்பாக கவனம் செலுத்துவோம்.

மேலும் இதற்கான உதிரிபாகங்கள் இந்த ஆட்டோ விற்பனை செய்யப்படும் அனைத்துப்பகுதிகளிலும் கிடைப்பதை உறுதி செய்வோம், இதன் மூலம் வாடிக்கையாளர்கள் சூப்பர் ஆட்டோவை சொந்தமாக வைத்திருப்பது குறித்து மகிழ்ச்சி அடைவார்கள்.

தமிழகம் எங்களுக்கு முக்கிய சந்தையாகும் .மேலும் மாநில அரசு மின்சார வாகனங்கள் மீது அதிக கவனம் செலுத்துகிறது என்று அவர் தெரிவித்தார். மோன்ட்ரா எலக்ட்ரிக் சூப்பர் ஆட்டோ தொழில்துறையின் சிறந்த முறுக்கு விசையான 60 என்எம் மற்றும் 55 கிமீ வேகம் செல்லும் திறன் கொண்டதாகும்.

மேலும் இதில் பார்க்கிங் உதவி பயன்முறையுடன் சிறந்த பொருளாதாரத்திற்கான மல்டி டிரைவ் முறைகளும் உள்ளன. பிரீமியம் வசதியுடன் இரண்டு வண்ண இருக்கை, கம்பீரமான முன்புற தோற்றம் மற்றும் பொருட்கள் வைப்பதற்கான போதிய இடவசதி ஆகியவற்றை கொண்டுள்ளது.

மேலும் ஓட்டுனர்கள் தங்கள் வாகனப் புள்ளிவிவரங்கள் மற்றும் பலவற்றைக் கண்காணிக்க இது டெலிமாடிக்ஸ் மற்றும் மொபைல் செயலியுடன் வருகிறது. அத்துடன் 3 ஆண்டுகள் அல்லது 1 லட்சம் கிலோ மீட்டர் உத்தரவாதம் அளிக்கப்படுகிறது.

வாரத்தில் 7 நாளும் 24 மணிநேரமும் சாலைகளில் வாகனம் பழுதானால் சர்வீஸ்வசதியும், 2 ஆண்டு நீட்டிக்கப்பட் ட உத்தரவாதம் மற்றும் 3 ஆண்டு ஏஎம்சி விருப்பத்தேர்வும் அளிக்கப்படுகிறது. இதன் மானியத்திற்கு பிந்தைய ஆரம்ப மாடல் எக்ஸ்ஷோரூம் விலை 3.02 லட்ச ரூபாய் ஆகும்.

பெரிய பேட்டரியுடன் உச்சபட்ச மாடல் விலை 3.45 லட்ச ரூபாய் ஆகும்.வாடிக்கையாளருக்கு எளிதாகவும் குறைந்த வட்டியில் நிதி உதவி அளிக்க இந் நிறுவனம் பல்வேறு வங்கிகளுடன் கூட்டு சேர்ந்துள்ளது. திருநெல்வேலியில் உள்ள டீலர்ஷிப் முகவரி ஆர்ஆர் கிரீன் லைப் மோட்டார்ஸ், எண்.1, விஜய் டவர், திருச்செந்தூர் சாலை,பாளையங்கோட்டை, திருநெல்வேலி ஆகும்.

Leave a Reply