வால்பாறை நகராட்சி திருமண மண்டபத்தில் நடைபெற்ற மக்கள் தொடர்பு முகாமில் கலெக்டர் கிராந்திகுமார் பாடி 140 பேருக்கு ரூ.24.60 லட்சம் மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்….

வால்பாறை நகராட்சி திருமண மண்டபத்தில் நடைபெற்ற மக்கள் தொடர்பு முகாமில் கலெக்டர் கிராந்திகுமார் பாடி 140 பேருக்கு ரூ.24.60 லட்சம் மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்….

கோவை,
கோவை மாவட்டம் வால்பாறை வட்டம் வால்பாறை நகராட்சி திருமண மண்டபத்தில் நடைபெற்ற மக்கள் தொடர்பு முகாமில் கலெக்டர் கிராந்திகுமார் பாடி பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களைப் பெற்றுக் கொண்டு 140 பேருக்கு ரூ.24.60 லட்சம் மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.


இந்நிகழ்ச்சியில் கலெக்டர் பேசும்போது தெரிவித்ததாவது,-வால்பாறை ஒரு மலைப் பகுதியாகும். இப்பகுதி சுற்றுலா மையமாக மாறிவருகிறது. தேவையான உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த இப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

இக்கோரிக்கைகள் அரசின் பரிசீலனைக்கு கொண்டுசெல்லப்படும். இப்பகுதிகளில் உள்ள குழந்தைகளின் உடல் எடை, உயரம் குறைவு உள்ளது.


அதனை சரிசெய்யும் வகையில் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி துறை மற்றும் சத்துணவுத்துறையின் சார்பில் சத்துமாவுகள் வழங்க நடவடிக்கை மேற் கொள்ளப்பட்டுள்ளன. இதன் மூலம் சத்துமாவுகள் வழங்கப்பட்ட குழந்தைகளின் எடை 400கிராம் அளவுக்கு உயர்ந்துள்ளது.

மேலும், பள்ளி செல்லாத குழந்தைகள், அடுத்த கல்வியாண்டில் பள்ளிக்கு வந்து படிப்பை தொடரவும், பத்து மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பு தேர்வு எழுதாத
மாணாக்கர்கள், தேர்வு எழுதவும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என கலெக்டர் கிராந்திகுமார் பாடி தெரிவித்தார்.

இம்முகாமில், பொள்ளாச்சி சார் ஆட்சியர் பிரியங்கா, வால்பாறை நகர்மன்ற தலைவர் அழகுசுந்தரவள்ளி, துணைத்தலைவர் செந்தில்குமார், முன்னாள் நகர் மன்ற உறுப்பினர் சுதாகர், வேளாண்மை இணை இயக்குநர் முத்துலெட்சுமி, தோட்டக்கலைத்துறை துணை இயக்குநர் புவனேஸ்வரி,இணை இயக்குநர் (ஊரக நலப்பணிகள்) சந்திரா, துணை இயக்குநர் (மருத்துவ நலபணிகள்) அருணா, வட்டாட்சியர் ஜோதி பாஸ்கர் மற்றும் அரசுத்துறை அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Leave a Reply