சிறுவாணி ஆற்றின் குறுக்கே தடுப்பணைகள் கட்டும் கேரளா… குடிநீருக்கு அவதி படப்போகும் கோவை மக்கள்.. குரல் கொடுப்பாரா கோவை கம்யூனிஸ்ட் எம்பி…

கோவை;
கோவை மக்களுக்கு முக்கிய குடிநீர் ஆதாரமாக சிறுவாணி ஆறு உள்ளது.
தமிழக – கேரள எல்லையில் அமைந்து உள்ள இந்த அணையின் மொத்த நீர் தேக்கம் 50 அடி. இரு மாநில ஒப்பந்தப்படி, கோவை மக்களின் குடிநீர் ஆதாரத்துக்கு தினமும், 10 கோடி லிட்டர் தண்ணீரை கேரள அரசு வழங்க வேண்டும்.
ஆனால், பருவ மழை சமயத்தில், 45 அடிக்கு மேல் தண்ணீர் தேக்காது, கூடுதல் தண்ணீரை கேரள பொதுப் பணித் துறையினர் ஆற்றில் வெளியேற்றி வருகின்றனர். தற்போது மழை இல்லாததால், சிறுவாணி அணையின் நீர்மட்டம் வெறும் 7 அடியாக உள்ளது. குடிநீர் தேவைக்காக நேற்று, 4 கோடி லிட்டர் தண்ணீர் எடுக்கப்பட்டது.
இதுபோன்ற சூழலில் பில்லுார் அணை கைகொடுத்து வருகிறது. மேற்கு தொடர்ச்சி மலையில் பெய்யும் மழை நீர், கேரள மாநிலம், அட்டப்பாடி வழியாக, பவானி ஆறாக பில்லுார் அணைக்கு திருப்பிவிடப்படுகிறது.
இச்சூழலில், பவானிக்கு செல்லும் சிறுவாணி ஆற்றின் குறுக்கே கேரள அரசு 3 தடுப்பணைகள் கட்டி வருவது தமிழக மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
கேரளமாநிலம், பாலக்காடு மாவட்டம், அட்டப்பாடி அருகே குளிக்கடவு – சித்துார் வழித் தடத்தில் உள்ள நெல்லிப்பதி எனும் இடத்தில், சிறுவாணி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டும் பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன.
தவிர, ஆற்றில் மேலும் இரு இடங்களில் தடுப்பணைகள் கட்டவும் கேரள அரசு திட்டமிட்டு உள்ளது. கேரள அரசின் நடவடிக்கைகளால், கோவை மக்களுக்கு கோடை காலத்தில் குடிநீர் பற்றாக்குறை அதிகரிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் சிறுவாணி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டும் கேரள அரசின் நவடிக்கையை கண்டித்து, கோவையில் உள்ள அரசியல் கட்சியினர், விவசாய அமைப்புகள் கண்டன குரலை எழுப்பி வருகின்றனர்.
மேலும் கோவை எம்பி யாக கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த நடராஜன் இருந்து வருகிறார். கேரளாவில் கம்யூனிஸ்ட் கட்சி ஆளுங்கட்சியாக இருந்து வருகிறது.
கோவை மக்களின் குடிநீர் ஆதாரமாக விளங்கும் சிறுவாணி அணையில் தடுப்பனை கட்டும் கேரளா கம்யூனிஸ்ட் அரசிடம் உடனடியாக கோவை கம்யூனிஸ்ட் எம் பேசி தடுப்பணை கட்டும் கேரளா அரசின் செயலை தடுத்து நிறுத்த வேண்டும் என்று கோவை மக்கள் எதிர்பார்க்கின்றனர்.
செய்வாரா கோவை எம்பி நடராசன்.