தமிழகத்திற்கு அடுத்த அடி… நீர்வளத்தை தனியாருக்கு தாரைவார்க்கும் மசோதாவுக்கு ஒப்புதல் வழங்கிய திமுக அரசு… சூழியல் ஆர்வலர்கள் கடும் அதிர்ச்சி…   

தமிழகத்திற்கு அடுத்த அடி… நீர்வளத்தை தனியாருக்கு தாரைவார்க்கும் மசோதாவுக்கு ஒப்புதல் வழங்கிய திமுக அரசு… சூழியல் ஆர்வலர்கள் கடும் அதிர்ச்சி…   

சென்னை;

தமிழகத்தில் நேற்று முதல் இரண்டு விஷயங்கள் பேசு பொருளாகவும், சர்ச்சையாகவும் மாறியுள்ளன. ஒன்று தனியார் தொழிற்சாலைகளில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கான 12 மணி நேரமாக அதிகரித்தது பல்வேறு விமர்சனங்களை ஏற்படுத்தியுள்ளது.

இந்தசூழலில் நேற்றைய சட்டப்பேரவையில் திமுக அரசு சைலண்டாக இன்னொரு பெரிய வேலையை செய்துள்ளது சூழலியல் ஆர்வளர்கள் மத்தியில் கடும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.

இது குறித்து பூவுலகின் நண்பர்கள் அமைப்பு தனது ட்விட்டர் பதிவில்,

‘‘நீர்நிலைகள், நீரோடைகள், வாய்க்கால் ஆகியன அமைந்துள்ள 100 ஏக்கருக்கு குறையாத நிலங்களைச் சிறப்புத் திட்டம் என்னும் பெயரில் தனியார் பெரு நிறுவனங்களுக்கு ஒருங்கிணைத்து வாரிக்கொடுக்கும் வகையில் தமிழ் நாடு நில ஒருங்கிணைப்புச் (சிறப்பு திட்டங்களான) சட்டம் [Tamil Nadu Land Consolidation (for Special Projects) Act, 2023] என்னும் புதிய சட்ட மசோதாவிற்கு, திமுக தலைமையிலான தமிழ்நாடு அரசு சட்டபேரவையில் நேற்று ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

நீர்நிலைகள் உள்ளடங்கிய 100 ஏக்கர் அதிகமான பரப்பளவில் திட்டமிடப்படும் எந்த ஒரு திட்டத்திற்கும் அரசின் சிறப்பு அனுமதி வழங்கப்பட்டால், நீர்நிலைகளையும் திட்ட உரிமையாளர் தன் பயன்பாட்டில் வைத்துக் கொள்ளலாம் என்று கூறுகிறது இச்சட்ட மசோதா.

இப்படி நீர்நிலைகளை பயன்படுத்திக்கொள்ள நிபுணர் குழு மூலம் நிலம் ஒருங்கிணைப்பு திட்டம் உருவாக்கப்படும் என்றும் மசோதா கூறுகிறது.

இந்த மசோதா சட்டமாக்கப்பட்டால், பரந்தூர் விமான நிலையம் போன்ற திட்டங்கள் நீர்நிலைகளில் அமைக்க மட்டுமே ஏதுவாக இருக்கும். மேலும் நீர்நிலைகள் பாதுகாப்பிற்காக இருக்கக்கூடிய பிற சட்டங்கள் மற்றும் ஆணைகள் நீர்த்துப்போகும் வாய்ப்புகளையும் இந்த சட்ட மசோதா உருவாக்கியுள்ளது.

மேலும், வேளாண்மை, மேய்ச்சல் சார்ந்த செயல்பாடுகளும் பாதிப்புகுள்ளாகும். நிலப்பயன்பாடு மாற்றப்படுவது புவி வெப்பமாதலை அதிகரிக்கும் என்று ஐ.பி.சி.சி. ஆய்வறிக்கைகள் கூறுவதௌ கவனத்தில் கொள்ள வேண்டும்.

எனவே உடனடியாக இந்த சட்ட மசோதாவை திரும்பப்பெற பூவுலகின் நண்பர்கள் சார்பாக கோரிக்கை வைக்கிறோம்’’ என தெரிவித்துள்ளது.

Leave a Reply