19 ஆயிரம் செல்போன் எண்கள் முடக்கம்.. தமிழக சைபர் கிரைம் அதிரடி நடவடிக்கை..

19 ஆயிரம் செல்போன் எண்கள் முடக்கம்.. தமிழக சைபர் கிரைம் அதிரடி நடவடிக்கை..

டெல்லி:

தொழில்நுட்ப வசதி பெருக பெருக சைபர் கிரைம் மோசடிகளும் அதிகரித்து வருகின்றன. இத்தகைய மோசடிகளில் ஈடுபடும் செல்போன் எண்களை முடக்க தமிழ்நாடு சைபர் கிரைம் போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

இத்தகைய மோசடிகளில் ஈடுபடும் செல்போன் எண்களை அடையாளம் கண்டு நடவடிக்கை எடுப்பதற்காக மத்திய உள்துறை அமைச்சகம் இந்திய சைபர் கிரைம் ஒருங்கிணைப்பு மைய பிரத்யேக இணையதளம் ஒன்றை உருவாக்கியது.

இந்த இணையதளத்தில் சைபர் கிரைம் மோசடியில் ஈடுபடும் நபர்கள் பயன்படுத்திய செல்போன் எண்களை சைபர் கிரைம் போலீசார் பதிவேற்றம் செய்யும் வசதி உள்ளது. இந்த செல்போன் எண்களை ஆய்வுக்கு உட்படுத்திய பிறகு முடக்கப்படும்.

இந்த இணையதளத்தில், தமிழகத்தில் சைபர் மோசடியில் தொடர்புடைய செல்போன் எண்களை சைபைர் கிரைம் போலீசார் பதிவேற்றம் செய்து வருகின்றனர். அந்த வகையில், தமிழ்நாடு சைபர் கிரைம் போலீஸார் தமிழ்நாட்டில் குற்ற செயல்களில் தொடர்புடைய சுமார் 20,197 செல்போன் எண்களை முடக்க பரிந்துரை செய்யப்பட்டு இருந்தது.

இவற்றை ஆய்வு செய்து சுமார் 19,654 செல்போன் எண்கள் முடக்கப்பட்டுள்ளன. இந்தியாவிலேயே தமிழ்நாடு சைபைர் கிரைம் போலீசார்தான் அதிக எண்களை முடக்குவதற்கு பரிந்துரை செய்து இருந்தனர் என்பது கவனிக்கத்தக்கது.

சைபர் கிரைம் போலீசாரின் இந்த அதிரடி நடவடிக்கை மூலம் மோசடி வேலைக்கு பயன்படுத்தப்படும் செல்போன்கள் எண்கள் முடக்கப்பட்டுள்ளதால் சைபர் கிரைம் குற்றங்கள் குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Leave a Reply