அண்ணாமலை மீது வழக்கு தொடுக்க மாட்டேன் … ஏன் ?காரணம் சொன்ன தமிழக அமைச்சர்…

அண்ணாமலை மீது வழக்கு தொடுக்க மாட்டேன் … ஏன் ?காரணம் சொன்ன  தமிழக அமைச்சர்…

சென்னை:

கடந்த சில நாட்களாக சமூக வலைத்தளங்களில் அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் பேசும் ஆடியோ என்று ஒரு ஆடியோ வைரலாகி வருகிறது. இந்த நிலையில் நேற்று இதை பற்றி நீண்ட அறிக்கை வெளியிட்டார்.

அவர் அளித்த விளக்கத்தில்,

என்னை பொது சமூகத்தில் வில்லன் போல் சித்தரிக்கிறார்கள். அவர்கள் தங்களின் தோற்றத்தை மாற்றிக்கொள்ள விரும்புகிறார்கள். என்னை இந்த அரசுக்கு எதிரான ஒரு தனிப்பட்ட போராளி போல் அவர்கள் சித்தரிக்க காட்டிக்கொள்ள முயற்சி செய்கிறார்கள்.

நான் இந்த பொது வாழ்க்கையில் என்ன செய்தேனோ அதெல்லாம் என் தலைவர்.. திமுக தலைவர்.. முதல்வர் ஸ்டாலின் மட்டுமே காரணம் . எங்களை பிரிக்க நடக்கும் சதிகள் எதுவும் வெற்றிபெறாது.

இதனால் இந்த ஆடியோவிற்கு விளக்கம் அளிக்க வேண்டிய கட்டத்தில் இருக்கிறேன். இந்த தவறான, பொய்யான வீடியோவை அரசியல் தொடர்பற்ற சிலரும், ஊடகங்களும் விவாதித்து வருகின்றன. தற்போது பரவி வரும் ஆடியோ முழுக்க முழுக்க பொய்யானது. எளிதில் அணுகக்கூடிய மேம்பட்ட தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி புனையப்பட்ட அல்லது இயந்திரத்தால் உருவாக்கப்பட்ட ஆடியோ கிளிப்களை உருவாக்கும் திறன் தற்போது உலகம் முழுக்க உள்ளது.

இதன் மூலம் வரும் நாட்கள் மற்றும் மாதங்களில் அதிக தீங்கிழைக்கும் உள்ளடக்கத்துடன் அதிகமான ஆடியோ மற்றும் வீடியோ கிளிப்கள் வெளியானாலும் அதை கண்டு நாம் ஆச்சரியப்பட கூடாது.

நான்காம் தூணாக இருக்கும் ஊடகங்கள் இது போன்ற பொய்யான ஆடியோக்களுக்கு பின்னால் செல்ல வேண்டாம். அது மிகப்பெரிய தவறாக அமைந்துவிடும். இந்த சமீபத்திய ஆடியோக்கள் பற்றிய என்னுடைய ஒரே கடைசி அறிக்கை இதுதான். இனிமேல் இது போன்ற பொய்யான அவதூறுகளை நான் புறக்கணிப்பேன்.

இத்தகைய அவதூறுகள் என்னுடைய சகிப்புத்தன்மையை மிஞ்சும் அளவிற்கு இருந்தால், நான் சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டிய கட்டாயம் ஏற்படும். வழக்குத் தொடர, அதை விசாரிக்க பல மாதங்கள் ஆகும் என்பதை நான் உணர்ந்தாலும், அத்தகைய நடவடிக்கைகள் சிலருக்கு விளம்பரத்தை கொடுக்கும்.

நான் வழக்கு தொடுப்பது சிலருக்கு தேவையற்ற விளம்பரத்தை கொடுக்கும் என்பதால் அதை செய்ய மாட்டேன், என்று அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் குறிப்பிட்டு உள்ளார்.

Leave a Reply