அருள்நிதி நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் ‘கழுவேத்தி மூர்க்கன்’ பட டீசர் வெளியிடு!!

அருள்நிதி நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் ‘கழுவேத்தி மூர்க்கன்’ பட டீசர் வெளியிடு!!

கடந்த 2019-ம் ஆண்டு ஜோதிகா நடிப்பில் வெளியான ‘ராட்சசி’ படம் மூலம் கவனம் ஈர்த்தவர் இயக்குனர் சை.கௌதமராஜ். இவர் தற்போது ‘கழுவேத்தி மூர்க்கன்’ என்ற படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தில் அருள்நிதி கதாநாயகனாக நடிக்க இவருக்கு ஜோடியாக துஷாரா விஜயன் இணைந்துள்ளார்.

இப்படத்தில் சந்தோஷ் பிரதாப், சாயாதேவி, முனீஸ்காந்த் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். ஒலிம்பியா மூவிஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு டி.இமான் இசையமைக்கிறார். ‘கழுவேத்தி மூர்க்கன்’ திரைப்படத்தின் முதல் தோற்ற போஸ்டர் மற்றும் மோஷன் போஸ்டர் சமீபத்தில் வெளியாகி கவனம் ஈர்த்தது.

இப்படத்தின் டீசரை நேற்று இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டிருந்தார். இந்நிலையில் இந்த டீசர் வெளியான 24 மணி நேரத்தில் 2 மில்லியன் பார்வையாளர்களுக்கு மேல் கடந்து வருவதாக படக்குழு அறிவித்துள்ளது.

Leave a Reply