வருகிற மே 12-ஆம் தேதி திரையரங்குகளில் ”ஃபர்ஹானா”

வருகிற மே 12-ஆம் தேதி திரையரங்குகளில் ”ஃபர்ஹானா”

‘மான்ஸ்டர்’, ‘ஒரு நாள் கூத்து’ போன்ற படங்களை இயக்கிய நெல்சன் வெங்கடேசன் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘ஃபர்ஹானா’. இந்த படத்தில் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். மேலும், இதில் இயக்குனர் செல்வராகவன், ஜித்தன் ரமேஷ், கிட்டி, அனுமோல், ஐஸ்வர்யா தத்தா உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்கள்.

ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரித்துள்ள இப்படத்திற்கு ஜஸ்டின் பிரபாகரன் இசையமைத்துள்ளார். ‘ஃபர்ஹானா’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் பாடல்கள் சமீபத்தில் வெளியாகி வைரலானது. இதையடுத்து இப்படத்திற்கு தணிக்கைக் குழு யு/ஏ சான்றிதழ் வழங்கியுள்ளது.

இதையடுத்து இப்படத்தின் டீசர் இன்று மாலை 5 மணிக்கு வெளியாகும் என படக்குழு அறிவித்திருந்தது. அதன்படி, ‘ஃபர்ஹானா’ படத்தின் டீசர் தற்போது வெளியாகியுள்ளது. கால்சென்டரில் வேலை பார்க்கும் நடுத்தர பெண்ணின் கஷ்டத்தை வெளிப்படுத்துவது போல் உருவாகியுள்ள இந்த டீசர் இணையத்தில் ரசிகர்களின் கவனம் ஈர்த்து வருகிறது.

Leave a Reply