ஜி ஸ்கொயர் ரெய்டு…. சபரீசனின் நெருங்கிய நண்பரும் திமுக எம்.எல்.ஏ.வுமான மோகன் வீட்டிலும் ரெய்டு….

ஜி ஸ்கொயர் ரெய்டு…. சபரீசனின் நெருங்கிய நண்பரும் திமுக எம்.எல்.ஏ.வுமான மோகன் வீட்டிலும் ரெய்டு….

சென்னை;

ஜி ஸ்கொயர் நிறுவனத்திற்கு சொந்தமான 50க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். கடந்த சில நாட்களுக்கு முன்னர் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை சென்னையில் உள்ள கமலாலயத்தில் திமுக பிரமுகர்களின் சொத்துப் பட்டியலை வெளியிட்டார்.

அதில், திமுக அமைச்சர்கள், எம்.பிக்கள் உள்ளிட்டோரின் சொத்துப் பட்டியல்கள் வெளியாகின. சுமார் 1.30 லட்சம் கோடி மதிப்பிலான சொத்து பட்டியலை அண்ணாமலை வெளியிட்டார்.

 மேலும் இந்த சொத்துப் பட்டியல் தொடர்பாக சிபிஐ அலுவலகத்தில் புகார் அளிக்கவுள்ளதாகவும் கூறியிருந்தார். இந்நிலையில், சபரீசனுக்கு சொந்தமான ஜி ஸ்கொயர் நிறுவனத்திற்கு சொந்தமான 50க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். அதிகாலை முதலே 

 ஜி ஸ்கொயர் நிறுவனத்திற்கு சொந்தமான 50 ற்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.  

இந்நிலையில், திமுக எம்.எல்.ஏ வீட்டிலும் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். சென்னை அண்ணாநகர் சட்டமன்ற உறுப்பினர் மோகன் மற்றும் அவரது மகன் கார்த்திக் மோகன் வீட்டிலும் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.

கார்த்திக் மோகன் திமுக தகவல் தொழில்நுட்ப அணியின் மாநில துணை செயலாளர் மற்றும் சபரீசனின் நெருங்கிய நண்பர் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply