இதுக்கு மதுவை டோர் டெலிவரி செய்யலாம்..!! – சீறிய வானதி சீனிவாசன்…

இதுக்கு மதுவை டோர் டெலிவரி செய்யலாம்..!! – சீறிய வானதி சீனிவாசன்…

விளையாட்டு மைதானங்களில் மது அருந்த அனுமதித்ததற்கு பதிலாக மதுவை டோர் டெலிவரி செய்யலாம் என பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் காட்டமாக தெரிவித்துள்ளார்.

திருமண மண்டபம் உள்ளிட்ட சில பகுதிகளில் மது அருந்த அனுமதி உண்டு என்று செய்தி வெளியானதை அடுத்து இந்த செய்திக்கு பலர் கண்டனம் தெரிவித்து வந்தனர் இந்த நிலையில் அமைச்சர் செந்தில் பாலாஜி இது குறிப்பு விளக்கம் அளித்தார்.

ஐபிஎல் போன்ற விளையாட்டு மைதானங்கள் சர்வதேச நிகழ்வுகள் நடக்கும் இடங்களில் மட்டுமே மது அருந்த அனுமதி என்றும் திருமண மண்டபங்களில் அனுமதி கிடையாது என்றும் கூறியிருந்தார்.

ஆனால் நெட்டிசன்கள் தமிழக அரசின் அரசாணையை சமூக வலைத்தளத்தில் பதிவு செய்து அதில் திருமண மண்டபத்தில் மது அருந்த அனுமதி என்று இருப்பதை சுட்டி காட்டி இருந்தனர்.

இந்த நிலையில் இது குறித்து பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் கூறும்போது மக்களை சீரழிவை நோக்கி இழுத்துச் செல்லும் முயற்சியை தமிழ்நாடு அரசு செய்து வருகிறது என்றும் மைதானங்களில் மது அருந்த அனுமதி அளித்ததற்கு பதிலாக டோர் டெலிவரி செய்யலாம் என்றும் அவர் காட்டமாக தெரிவித்துள்ளார். இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Leave a Reply