மேட்டுப்பாளையம், அன்னூர் பகுதிகளில் பலத்த காற்று மற்றும் மழையினால் வாழை மரங்கள் சேதமடைந்ததை கலெக்டர் கிராந்திகுமார் பாடி நேரில் பார்வையிட்டு ஆய்வு…..

மேட்டுப்பாளையம், அன்னூர் பகுதிகளில் பலத்த காற்று மற்றும் மழையினால் வாழை மரங்கள் சேதமடைந்ததை கலெக்டர் கிராந்திகுமார் பாடி நேரில் பார்வையிட்டு ஆய்வு…..

கோவை,
கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் வட்டம், வெள்ளியங்காடு, தேக்கம்பட்டி மற்றும் அன்னூர் வட்டம் பொகளுர் ஆகிய பகுதிகளில் பலத்த காற்று மற்றும் மழையினால் வாழை மரங்கள் சேதமடைந்ததை கலெக்டர் கிராந்திகுமார் பாடி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.


பின்னர் அவர் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது:
கோவை மாவட்டத்தில் கடந்த 21ம் தேதி வீசிய பலத்த காற்றினால் ஒரு சில பகுதிகளில் வாழைமரங்கள் முறிந்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மார்ச், ஏப்ரல் மாதங்களில் இதுபோன்ற பாதிப்புகள் ஏற்படும்.

எனவே, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அறுவடைக்கு தயாராக உள்ள பயிர்களுக்கு, பயிர் காப்பீடு செய்வது சிறந்தது. மேட்டுப்பாளையத்தில் 13 கிராமத்திலும், அன்னூரில் 4 கிராமத்திலும் வாழைமரங்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.


மேட்டுப்பாளையத்தில் 1,46,000 மரங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக கணக்கெடுக்கப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்டுள்ள விளை நிலங்களின் சிட்டா, அடங்கல், வங்கி கணக்கு உள்ளிட்ட சான்றுகள் இழப்பீடு வழங்குவதற்காக அரசின் பரீசிலனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது என கலெக்டர் கிராந்திகுமார் பாடி தெரிவித்தார்.


இந்த ஆய்வின்போது மேட்டுப்பாளையம் சட்டமன்ற உறுப்பினர் ஏ.கே.செல்வராஜ், வருவாய் கோட்டாட்சியர் (வடக்கு ) கோவிந்தன், வட்டாட்சியர்கள் சந்திரன், காந்திமதி, தோட்டக்கலை துறை உதவி இயக்குநர் சுசீந்திரா, தேக்கம்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் நித்யா நந்தகுமார் ஆகியோர் உடனிருந்தனர்.

Leave a Reply