ஒரு சேலைக்காக ஆவேசமாக அடித்து கொண்ட 2 பெண்கள்.. சண்டையை கண்டு கொள்ளாமல் சேலையை தேர்ந்தெடுத்து கொண்டிருந்த மற்ற பெண்கள்…  வைரல் வீடியோ…

ஒரு சேலைக்காக ஆவேசமாக அடித்து  கொண்ட 2 பெண்கள்.. சண்டையை கண்டு கொள்ளாமல் சேலையை தேர்ந்தெடுத்து கொண்டிருந்த மற்ற பெண்கள்…  வைரல் வீடியோ…

பெங்களூரு,

 கர்நாடகாவின் பெங்களூரு நகரில் மல்லேஷ்வரம் பகுதியில் மைசூர் சில்க்ஸ் என்ற பெயரில் ஜவுளி கடை ஒன்று செயல்பட்டு வருகிறது. வாடிக்கையாளர்களை ஈர்ப்பதற்காக  அந்த கடையில் ஆண்டுதோறும் குறைந்த விலையில் புடவைகள் விற்கப்படுவது வழக்கம்.

இந்த ஆண்டும் குறைந்த விலை அறிவிப்பு வெளியிடப்பட்ட நிலையில் பெண்கள் புடவை எடுக்க அந்த ஜவுளி கடையில் குவிந்து விட்டனர்.

அவர்களை வரிசைப்படுத்தி, கடை ஊழியர்களும் காவலர்களும் அனுப்பி கொண்டு இருந்தனர். அப்போது, திடீரென இரு பெண்களுக்கு இடையே புடவை எடுப்பதில் தகராறு ஏற்பட்டு உள்ளது. ஒருவர் தலைமுடியை பிடித்து இழுத்தும், அடித்தும் மற்றொரு பெண் தாக்குதலில் ஈடுபட்டார்.

இதனை கடைக்கு வந்திருந்த பெண்கள் சாதரணமாக பார்த்து கொண்டிருந்தனர். அவர்களை விலக்கி விடுவதற்காக கடையில் இருந்த பெண் பணியாளர்களும், காவலர்களும் முயற்சித்தனர்.

இந்த சூழலிலும் தங்களுக்கு புடவைதான் முக்கியம் என்பதுபோன்று சிலர் கடையில் புடவைகளை மும்மரமாக தேர்ந்தெடுத்து கொண்டிருந்தனர் .

 இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. லட்சக்கணக்கானோர் பார்வையிட்டும் உள்ளனர்.  எங்கு யார் அடித்து கொண்டால் என்ன நமக்கு புடவை தான் முக்கியம் என்பது போல் பெண்கள் நடந்துகொண்டிருந்தனர் அருமை என பலரும் கமென்ட் அடித்து வருகின்றனர்.

Leave a Reply