ஓபிஎஸ் மாநாட்டு மேடையில் கத்தியுடன் ஏறிய நபர் யார் ?…வெளியான உண்மை ..

திருச்சி
திருச்சி பொன்மலை ஜி கார்னர் மைதானத்தில், அதிமுக பொன்விழா, கட்சியின் நிறுவனர் எம்.ஜி.ஆர். மற்றும் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் பிறந்த நாள் விழா என முப்பெரும் விழா மாநாடு நடைபெற்றது.
முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் அணி சார்பில் நடைபெற்ற இந்த மாநாட்டில், பல ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.
இந்த மாநாட்டில் பேசிய ஓபிஎஸ்;
அதிமுக தொண்டர்களை ஒன்று இணைக்கும் தர்மயுத்தம் நடைபெற்று வருகிறது. இன்று முதல் நமது தர்மயுத்தம் தொடக்கம். அதிமுகவை அழிக்க எடப்பாடி. பழனிச்சாமியின் நம்பிக்கை துரோகத்திற்கு சாவு மணி அடிக்க நீங்கள் அனைவரும் ஒன்று இணைய வேண்டும்.
தொண்டர்களுக்காக நான் எவ்வளவு பெரிய தியாகம் கூட செய்ய தயார். அடுத்து அமைய போது ஜெயலலிதா ஆட்சியாக தான் இருக்க வேண்டும். இந்த மாநாடு புரட்சி , வெற்றி மாநாடு ஆகும் என ஓபிஎஸ் பேசினார்.
மாநாட்டில் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு செங்கோல் வழங்கி கவுரவிக்கப்பட்டது.
இந்த நிலையில் கத்தியுடன் ஒருவர் மாநாட்டு மேடையேறியதால் பரபரப்பு ஏற்பட்டது. அவரை பிடித்துச் சென்ற போலீசார், பொன்மலை காவல் நிலையத்தில் வைத்து விசாரித்ததில், விருதுநகர் மாவட்டம், சீனிவாசகப்பேரி கிராமத்தைச் சேர்ந்த கருத்தப்பாண்டி என்பதும், ஸ்ரீவில்லிபுத்தூர் ஓபிஎஸ் அணி விவசாயி பிரிவு தலைவர் என்பதும் தெரியவந்தது.
மேலும், தமது பாதுகாப்புக்காக கத்தி வைத்திருந்ததாகவும் தெரிவித்துள்ளார். இவர் மீது ஏற்கனவே சில கொலை வழக்குகள் உள்ளதால் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். மாநாட்டு நிகழ்வில் கத்தியுடன் ஒருவர் மாநாட்டு மேடையேறியதால் மாநாட்டு மேடை சிறிது நேரம் பரபரப்பாக இருந்தது.