மணல் கடத்தல் பற்றி போலிசுக்கு புகார் சொன்ன வி.ஏ.ஓ-வை அலுவலகத்தில் புகுந்து வெட்டி  கொலை செய்தமணல் கொள்ளையர்கள்… அதிர்ச்சி சம்பவம்…

மணல் கடத்தல் பற்றி போலிசுக்கு புகார் சொன்ன வி.ஏ.ஓ-வை அலுவலகத்தில் புகுந்து வெட்டி  கொலை செய்தமணல் கொள்ளையர்கள்… அதிர்ச்சி சம்பவம்…

தூத்துக்குடி ;

தூத்துக்குடி மாவட்டம் வல்லநாடு அருகே முறப்பநாடு கிராம நிர்வாக அதிகாரியாக பணியாற்றியவர் 55 வயதான லூர்துபிரான்சிஸ்.

இவரை இரண்டு மர்ம நபர்கள் கிராம நிர்வாக அலுவலகத்திற்குள் புகுந்து வெட்டியுள்ளனர். படுகாயமுற்ற லூர்து பிரான்சிஸ் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார்.

அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

வெட்டிக்கொலை செய்யப்பட்ட லூர்து பிரான்சிஸ் சில நாட்களுக்கு முன்னர் அப்பகுதி மணல் கடத்தல் பற்றி காவல்துறையினரிடம் புகார் அளித்தது குறிப்பிடத்தக்கது.

அந்த மணல் கடத்தலில் சம்பந்தப்பட்டவர்கள் தான் இந்த சம்பவத்தில் ஈடுபட்டிருக்கலாம் என ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர். மற்றொருவரை தேடி வருவதாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply