கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு – விசாரணை வலயத்துக்குள் ஜோதிடர்..!!

கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு – விசாரணை வலயத்துக்குள் ஜோதிடர்..!!

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான கொடநாடு பங்களாவில் கொலை மற்றும் கொள்ளை நடந்த வழக்கு கடந்த சில ஆண்டுகளாக நடைபெற்று வரும் நிலையில் இந்த வழக்கில் தற்போது எடப்பாடியை சேர்ந்த ஜோதிடர் ஒருவரிடம் விசாரணை செய்ய சிறப்பு புலனாய்வுத் துறை முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன.

கோடநாடு வழக்கில் முக்கிய குற்றவாளியாக கருதப்படும் கார் ஓட்டுநர் கனகராஜ் இறப்பதற்கு முன் ஜோதிடரை சந்தித்துள்ளார் என்றும், கார் ஓட்டுனர் கனகராஜை கடைசியாக சந்தித்துப் பேசிய நபர் என்ற அடிப்படையில் ஜோதிடரிடம் விசாரணை நடத்த சிறப்புப் புலனாய்வுக்குழு முடிவு செய்திருப்பதாகவும் கூறப்படுகிறது.

எடப்பாடி பழனிசாமியின் பாதுகாப்பு அதிகாரியாக இருந்த டி.எஸ்.பி கனகராஜிடம் கடந்த வாரம் புலனாய்வுக்குழு விசாரணை நடத்திய நிலையில், ஓட்டுநர் கனகராஜுடன் தொடர்பில் இருந்த ஜோதிடரிடம் விசாரணை நடைபெறவுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Leave a Reply