ஹோட்டலில் தோசை சுட்ட “பிரியங்கா காந்தி” – களைகட்டிய கர்நாடக தேர்தல்..!!

ஹோட்டலில் தோசை சுட்ட “பிரியங்கா காந்தி” – களைகட்டிய கர்நாடக தேர்தல்..!!

கர்நாடக மாநில சட்டமன்ற தேர்தல் பிரச்சாரத்திற்கு வந்த பிரியங்கா காந்தி திடீரென ஒரு ஹோட்டலுக்குள் புகுந்து அந்த ஓட்டலில் தோசை சுட்ட வீடியோ இணையதளங்களில் வைரல் ஆகி வருகிறது.

கர்நாடக மாநிலத்தில் மே பத்தாம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளதை அடுத்து ஆளும் பாஜக மற்றும் எதிர்கட்சி காங்கிரஸ் ஆகிய இரண்டு கட்சிகளும் தீவிரமாக பிரச்சாரம் செய்து வருகின்றன.

காங்கிரஸ் கட்சியின் சார்பில் ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா காந்தி சூறாவளி பிரச்சாரம் செய்து வருகின்றனர். இந்த நிலையில் இன்று கர்நாடக மாநிலத்தில் பிரச்சாரம் செய்ய வந்த பிரியங்கா காந்தி திடீரென ஒரு ஹோட்டலுக்குள் சென்று அந்த ஓட்டலில் தோசை சுட்டார்.

இது குறித்த வீடியோ இணையதளங்களில் வைரல் ஆகி வருகிறது என்பது குறிப்பிடப்பட்டது. தமிழக தேர்தலின்போதும், இதேபோல் அரசியல்வாதிகள் தோசை சுடுவது பாத்திரம் கழுவுவது உள்பட பல்வேறு பணிகளை செய்து கேட்பார்கள் என்பது தெரிந்ததே.

Leave a Reply