திருச்சியில் ”பொன்னியின் செல்வன்” படக்குழு வெளியிட்டுள்ள புகைப்படங்கள் !!

திருச்சியில் ”பொன்னியின் செல்வன்” படக்குழு வெளியிட்டுள்ள புகைப்படங்கள் !!

மணிரத்னம் இயக்கத்தில் விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி ,ஜஸ்வர்யா ராய், திரிஷா, ஜஸ்வர்யா லட்சுமி உள்ளிட்ட பல முன்னணி பிரபலங்கள் நடித்துள்ள திரைப்படம் பொன்னியின் செல்வன்.

கடந்த ஆண்டும் வெளியான பொன்னியின் செல்வன் முதல் பாகத்தின் வரவேற்பால் இரண்டாம் பாகத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. பொன்னியின் செல்வன் -2 திரைப்படம் வருகிற 28ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

இப்படத்தின் புரொமோஷனுக்காக படக்குழு தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, மும்பை, பெங்களூர் போன்ற இடங்களில் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில் பொன்னியின் செல்வன் படக்குழு திருச்சியில் களம் இறங்கியுள்ளனர். இது தொடர்பான புகைப்படங்களை படக்குழு வெளியிட்டுள்ளது. இந்த புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது.

பொன்னியின் செல்வன் -2 திரைப்படம் தமிழ், இந்தி, தெலுங்கு, மலையாளம், கன்னடம் மொழிகளில் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply