அவரைப்பற்றி எதுவும் என்னிடம் கேட்க வேண்டாம் – தமிழ்நாட்டில்..   அவருக்கும் எனக்கும் எந்த பிரச்சனையும் இல்லை – டெல்லியில்… அமித்ஷாவை சந்தித்த பிறகு அண்ணாமலையை பற்றி எடப்பாடியின் பேச்சு..

அவரைப்பற்றி எதுவும் என்னிடம் கேட்க வேண்டாம் – தமிழ்நாட்டில்..     அவருக்கும் எனக்கும் எந்த பிரச்சனையும் இல்லை – டெல்லியில்…          அமித்ஷாவை சந்தித்த பிறகு அண்ணாமலையை பற்றி எடப்பாடியின்  பேச்சு..

டெல்லி ;

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலைக்கும் எனக்கும் எந்த வித பிரச்சனையும் இல்லையென அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். 

 அதிமுக பொதுச்செயலாளராக பதவியேற்ற எடப்பாடி பழனிசாமி, பாஜக மூத்த தலைவரும், மத்திய உள்துறை அமைச்சருமான அமித்ஷாவை நேற்று இரவு சந்தித்து பேசினார். இந்த சந்திப்பில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலையும் உடன் இருந்தார்.

இந்த சந்திப்பின் போது தமிழக அரசியல் நிலவரம்,  தமிழகத்தில் அதிமுக- பாஜக இடையே ஏற்பட்டுள்ள மோதல் குறித்து விவாதிக்கப்ப்டது. இதனை பிறகு நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக- பாஜக கூட்டணி தொடர்வதாக அறிவிக்கப்பட்டது.

 இந்தநிலையில் டெல்லியில் இருந்து சென்னை புறப்படுவதற்கு முன் செய்தியாளர்களை சந்தித்த எடப்பாடி பழனிசாமி,

தமிழகத்தில் 2019 ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் இருந்து பாஜகவுடன் கூட்டணியில் உள்ளோம். வருகிற நாடாளுமன்ற தேர்தலிலும் பாஜகவுடன் கூட்டணி தொடர்கிறது என தெரிவித்தார். 

அதிமுகவுக்கும், அண்ணாமலைக்கும் எந்த வித முரண்பாடும் இல்லை. பிரச்சனையும் இல்லை,  ஊடகங்கள் வேண்டுமென்றே அவர் அப்படி சொல்கிறாரே, இப்படி சொல்கிறாரே என கேட்பதால், அது பற்றி பேச வேண்டாம் என்று சொன்னேன்.

ஒவ்வொரு கட்சிக்கும் தனித் தனி கொள்கைகள் உள்ளது எனவும் தெரிவித்தார். தமிழக நிதி அமைச்சர் பி டி ஆர் பேசியதாக வெளியான ஆடியோவில் உள்ள செய்திகள் அதிர்ச்சி அளிப்பதாக உள்ளது.

 முப்பதாயிரம் கோடி ஊழல் நடந்திருப்பதாக அமைச்சரே கூறியுள்ளார். உதயநிதி,சபரீசன் தொடர்பான ஆடியோ குறித்து ஆய்வு செய்து உரிய விசாரணை நடத்த வேண்டும்.

 திமுக அரசு செய்யும் தவறுகளை  அதன் கூட்டணிக் கட்சிகள்  சுட்டிக் காட்டுவதில்லையெனவும். 10 ஆண்டுகளாக காங்கிரஸ் கட்சி திமுகவுடன் கூட்டணியில்  உள்ளதாகவும் குறிப்பிட்டார்.

தமிழகத்தில் எடப்பாடி பேசும்போது அண்ணாமலையை பற்றி என்னிடம் எதுவும் பேசவேண்டாம் எனவும் அவரைப்பற்றி பேசினாலே கோபப்பட்டு வந்த வந்த எடப்பாடி டெல்லியில் அமித்ஷா வை சந்தித்த பின் அண்ணாமலைக்கும் எனக்கு எந்த பிரச்சனை இல்லை என கூறியிருப்பது பற்றி 1 மணி நேர பேச்சு வார்த்தையில் எடப்பாடியின்  எதிர்காலத்தை புட்டுபுட்டு வைத்திருப்பார்கள் அதன் விளைவுதான் எடப்படியின் இந்த மனமாற்றத்திற்கு காரணம் என்று அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர் .

Leave a Reply