அதிக விலையுள்ள போதை பொருளை  (மெத்தபெட்டமைன்)  விற்பனைக்கு வைத்திருந்த நபர் கோவையில் கைது…

அதிக விலையுள்ள போதை பொருளை  (மெத்தபெட்டமைன்)  விற்பனைக்கு வைத்திருந்த நபர் கோவையில் கைது…

கோவை ;

உயர் ரக போதை பொருட்கள் விற்பனைக்கு வைத்து இருந்த நபரை கோவை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

போதைப் பொருள் இல்லாத கோவையை உருவாக்கும் பொருட்டு கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரிநாராயணன், தீவிரமாக செயல்பட்டு வருகிறார்.

 இந்நிலையில்  துடியலூர் காவல் நிலையத்திற்கு உட்பட்ட வெள்ளகிணர் பகுதியில் உயர் ரக போதை பொருள் விற்பனைக்கு வைத்து இருப்பதாக கிடைத்த ரகசிய தகவல் கிடைத்தது.

அதன் அடிப்படையில், தனிப்படை காவல்துறையினர் சம்பவ இடமான வெள்ளகிணர் பகுதிக்கு விரைந்து சென்று சோதனை மேற்கொண்ட போது, உயர்ரக போதை பொருளான METHAMPHETAMINE-ஐ வைத்து இருந்த கேரளா மாநிலத்தை சேர்ந்த ஷனித் என்பவரை கைது செய்து அவரிடம் இருந்து ரூ.24,000/- மதிப்புள்ள 12 கிராம் எடையுள்ள உயர்ரக போதை பொருளான மெத்தபெட்டமைன் (METHAMPHETAMINE)-ஐ பறிமுதல் செய்தனர்.

பின்னர் அந்த நபரை நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Leave a Reply